தற்காப்புக் கலை

சிங்கப்பூர் சீலாட் சம்மேளனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியும் சிலாட் தற்காப்புக் கலையின் முன்னாள் உலக விருது வெற்றியாளருமான ‌‌ஷேக் அலாவ்’தீன் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிறுவயதில் பள்ளி சென்று வீடு திரும்பும்போதெல்லாம் சக மாணவர்கள் தன்னை அடித்துத் துன்புறுத்தியதாக 28 வயது ஷாம் ராஜ் இளஞ்சேரன் கூறினார். அந்த வயதில் சிறிய உருவம் கொண்டவராக அவர் இருந்தார். வீட்டிலும் குறும்புக்காரன் என்று பெயர் எடுத்த ஷாம், தன்னை ஒருமுறை உறவினர்கள் அனைவரும் சேர்ந்து அடித்த கொடுமையான சம்பவத்தையும் நினைவுகூர்ந்தார்.
ஹாங்ஜோ: சீனாவின் ஹாங்ஜோ நகரில் நடைபெற்ற இவ்வாண்டு ஆசிய விளையாட்டுகளின் கடைசி தங்கப் பதக்கங்களை சீனா, தைவான், ஜப்பான் ஆகியவை வென்றுள்ளன.
ஹாங்ஜோ: இவ்வாண்டின் ஆசிய விளையாட்டுகளில் சிங்கப்பூர் அதன் முதல் தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றியுள்ளது. ஆண்கள் ‘கைட்ஃபோய்லிங்’ எனப்படும் நீரில் சறுக்கியபடி பட்டம் விடும் போட்டியில் சிங்கப்பூரின் மேக்சிமிலியன் மாய்டர் தங்கம் வென்றார்.
ஹாங்ஜோ: இவ்வாண்டின் ஆசிய விளையாட்டுகளில் சிங்கப்பூருக்கு அதன் முதல் பதக்கத்தை வென்று தந்துள்ளார் வூஷூ தற்காப்புக் கலை வீராங்கனை கிம்பர்லி ஓங். திங்கட்கிழமையன்று நடைபெற்ற பெண்களுக்கான சாங்சுவான் பிரிவில் ஓங் வெண்கலப் பதக்கம் வென்றார்.