அதிபர் தர்மன்

ஒற்றுமை, ஊழலின்மை, நன்னடத்தை ஆகியவற்றில் சிங்கப்பூர் அரசியல்வாதிகளின் உயர்தரம் கட்டிக்காக்கப்படும் என்றும் அதில் எந்த ஒரு சரிவும் ஏற்படுவதை அனுமதிக்க இயலாது என்றும் அதிபர் தர்மன் சண்முகரத்னம் தெரிவித்து உள்ளார்.
பிரதமர் லீ சியன் லூங் தமது பதவி விலகல் கடிதத்தை அதிபர் தர்மன் சண்முகரத்னத்திடம் மே 13ஆம் தேதியன்று சமர்ப்பித்தார். தாமும் தமது அரசாங்கமும் மே 15ல் பதவி விலகுவதாக திரு லீ தமது கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.
மலேசிய மாமன்னர் சுல்தான் இப்ராகிம் இஸ்கந்தருக்கும் அவரது துணைவியார் ராஜா ஸரித் சோஃபியாவுக்கும் மே 6ஆம் தேதியன்று இஸ்தானாவில் சடங்குபூர்வ வரவேற்பு வழங்கப்பட்டது.
இந்தியாவில் உள்ள தொழில் வாய்ப்புகள் குறித்து அனைத்து சிங்கப்பூரர்களிடமும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று அதிபர் தர்மன் சண்முகரத்னம் கேட்டுக்கொண்டுள்ளார்.
பருவநிலை மாற்றம் , நீர், பல்லுயிர் இழப்பு ஆகியவற்றை ஒன்றாகச் சமாளிப்பதன் மூலம் பொருளியல் ரீதியாக பெரிய வாய்ப்புகள் கிடைக்கும் என்று அதிபர் தர்மன் சண்முகரத்னம் தெரிவித்தார்.