கண்காணிப்பு கேமரா

சென்னை: சென்னை ரயில்வே கோட்டத்தில் சென்னை சென்ட்ரல் - கூடூர், அரக்கோணம், சென்னை எழும்பூர் - விழுப்புரம் வழித்தடத்தில் மொத்தம் 128 நிலையங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணியை வரும் ஜூலை மாதத்துக்குள் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படாத இடங்களில் வாகனமோட்டிகள் வேகமாகச் செல்வதைப் புள்ளிவிவரங்கள் காட்டுவதாகக் கூறிய போக்குவரத்துக் காவல் பிரிவு, இந்தப் போக்கு கவலையளிப்பதாகத் தெரிவித்துள்ளது.
சிங்கப்பூரில் 2012ஆம் ஆண்டுமுதல் சிங்கப்பூர் காவல்துறை கண்காணிப்பு கேமராக்களைப் பொருத்தி வந்துள்ளது. அவை கிட்டத்தட்ட 7,500 வழக்குகளுக்கு உதவியுள்ளதாகக் காவல்துறையினர் வெள்ளிக்கிழமையன்று தெரிவித்தனர்.
கோத்தா கினபாலு: மலேசியாவின் கோத்தா கினபாலுவில் உள்ள ஏர்பிஎன்பி வாடகை அறையில் கேமரா மறைத்துவைக்கப்பட்டிருந்ததைக் கண்டு சீனாவிலிருந்து சுற்றுப் பயணம் வந்த இளம் ஜோடி அதிர்ச்சியடைந்துள்ளனர்.
பாலர் பருவ மேம்பாட்டு அமைப்பு, அனைத்து பாலர் பள்ளிகளிலும் கண்காணிப்புக் கேமரா இருப்பதை கட்டாயமாக்கியுள்ளது.