Tamilmurasu த‌மிழ் முர‌சு - முக‌ப்பு http://tamilmurasu.com.sg/taxonomy/term/1/0 ta பாகிஸ்தான் விமானம் மலைப்பகுதியில் விழுந்து வெடித்தது http://tamilmurasu.com.sg/node/8618
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லமாபாத்தில் தரை இறங்குவதற்கு சற்று நேரத்துக்கு முன்பு அடர்ந்த மலைப்பகுதியில் விழுந்த விமானம் தீப்பிழம்புகளாக வெடித்துச் சிதறியது.

விமானத்தில் ஆறு விமான ஊழியர்களும் 146 பயணிகளும் இருந்தனர்.

மேகமும் பனியும் சூழ்ந்த நுழைய முடியாத மார்கல்லா மலைப் பகுதியில் கிடந்த விமானத்தின் சிதைந்த பாகங்களுக்கு அருகே உடல்கள் சிதறிக் கிடந்தன என்று போலிசார் தெரிவித்தனர்.

முன்னதாக ஐந்து பேர் காயங்களுடன் மீட்கப் பட்டனர் என்றும் பின்னர் ஒருவரும் உயிர் பிழைக்க வில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

விபத்து நிகழ்ந்த இடத்திலிருந்து சுமார் 50 உடல்கள் மீட்கப்பட்டது என்று நம்பப்படுகிறது.

கராச்சியிலிருந்து புறப்பட்ட ஏர்புளு விமானம் நேற்று காலை 7.45 மணிக்கு தரை இறங்குவதற்கு தயாரானபோது விபத்தில் சிக்கியது என்று சிவில் விமானப் போக்குவரத்தின் பேச்சாளர் பெர்வஸ் ஜார்ஜ் தெரிவித்தார்.

ஏர்புளு விமானத்தின் பேச்சாளர் ரஹில் அஹ்மது, “மோசமான பருவநிலையே விபத்துக்கு காரணம், ஆனால் இந்த விவகாரத்தை விசாரணையாளர்களிடம் விட்டு விடுகிறேன்,” என்றார்.

விமானம் இறங்குவதற்கு முன்பு விமானத்துடனான தொடர்பு துண்டிக்கப் பட்டது என்று விமான நிலைய அதிகாரிகள் கூறினர்.
விபத்து நிகழ்ந்த மலைப்பகுதியில் வெளியான அடர்ந்த புகையில் நிவாரணப் பணி ஊழியர்கள் நுழைவதற்கு சிரமம் ஏற்பட்டது.
அப்பகுதிக்கு மேலே ஹெலிகாப்டர்கள் வட்டமடித்தன.

“பல குழுக்களை அனுப்பியிருக்கிறோம், ஆனால் ஒவ்வொரு பயணியை நெருங்கி உதவி செய்வது சிரமமான காரியமாக இருக்கிறது,” என்று நகர போலிஸ் தலைவர் பானி அமின் சொன்னார்.

சம்பவ இடத்தில் இருந்த தொலைக்காட்சி செய்தியாளர், “துண்டிக்கப் பட்ட உடற்பாகங்கள் எரிந்து கிடந்தன, இறந்தவர்களில் இரண்டு பெண்களின் உடல்களும் இருந்தன,” என்று கூறியதாக பிபிசி செய்தி குறிப்பிட்டது.

“கருகிய கைகளையும் கால்களையும்தான் பார்க்க முடிந்தது, நான் இரண்டு தலைகளையும் இரண்டு கால்களையும் இரண்டு கைகளையும் சேகரித்து பையில் போட்டேன்,” என்று மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்ட அதிகாரி அர்ஷாத் ஜாவித் சொன்னார்.
வீட்டின் மாடியில் விமானம் பறந்து சென்றதைப் பார்த்த 24 மணி தொலைக் காட்சி செய்தியாளர் அன்ஜும் ரஹ்மான், “மலைப் பகுதியில் விமானம் ஏன் உயரத்தில் பறக்கவில்லை என்பது வியப்பாக இருந்தது,” என்றார்.

மேலும்
முக‌ப்பு Wed, 28 Jul 2010 23:49:04 +0000 tamilmurasuweb 8618 at http://tamilmurasu.com.sg நான்கு வீடுகளை வீவக பறிமுதல் செய்தது http://tamilmurasu.com.sg/node/8617
அனுமதியின்றி வீட்டை வாடகைக்கு விட்ட நான்கு வீட்டு உரிமையாளர்களின் வீடுகளை வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் (வீவக) பறிமுதல் செய்துவிட்டது.

இந்நால்வரும் தங்களது வீட்டில் குடியிருக்க வில்லை. இவர்களில் ஒருவர், கடன்முதலைக்கு தனது வீட்டை வாடகைக்கு விட்டு, வாடகைப் பணத்தைக் கடன் தவணைத் தொகையாகப் பெற்றுக் கொள்ள அனுமதித்ததால், சொந்த வீட்டுக்குள் நுழைய முடியாத நிலைக்கு உள்ளானார்.

அனுமதியின்றி வீட்டை வாடகைக்கு விட்ட மேலும் அறுவருக்கு அபராதம் விதிக்கப்பட்டதாக வீவக செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.

இவ்வாண்டின் முதல் ஐந்து மாதங்களில் 2,600 வீடுகளில் வீவக சோதனையிட்டது.

சோதிக்கப்பட்ட வீடுகளில் 740 வீடுகள், பொதுமக்கள் கொடுத்த தகவலின்பேரில் சோதிக்கப்பட்டன.

“கிட்டத்தட்ட 2,300 வீடுகளில் எந்தப் பிரச்சினையும் இல்லை. மீதி 300 வீடுகள் குறித்து இன்னமும் விசாரணை நடைபெற்று வருகிறது.

“இவற்றில் 59 வீடுகளில் வாடகை விதிகள் மீறப் பட்டதாகச் சந்தேகிக்கப் படுகிறது,” என்றது வீவக.
வீட்டில் தங்கா விட்டாலும் ஓர் அறையைப் பூட்டி வைத்துவிட்டு, மீதி வீட்டை வாடகைக்கு விடும் வீட்டுரிமையாளர் களையும் வீவக கண்டுபிடித்தது.

“குறைந்தபட்ச குடியிருப்பு கால கட்டத்தை நிறை வேற்றாமலும், வீவக-வின் அனுமதியைப் பெறாமலும் வீட்டு உரிமையாளர்கள் வீட்டை வாடகைக்கு விட்டிருந்தால், இத்தகைய சம்பவங்களும் அனுமதியின்றி வாடகைக்கு விட்டதாகவே கருதப்படும்” என்று வீவக தெரிவித்தது.

அதோடு, கடன் முதலைகள் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு வீட்டைப் பயன்படுத்த அனுமதிக்க வேண்டாம் என்றும் வீட்டு உரிமையாளர்களை வீவக எச்சரித்தது.

வீட்டை வாடகைக்கு விட விரும்புவோர் வீவக-விடம் அனுமதி பெற வேண்டும். வீட்டில் அறைகளை வாடகைக்கு விட்டால், வாடகைக்குத் தங்கியிருப்பவர்களின் விவரங்களைப் பதிவு செய்யவேண்டும்.
முக‌ப்பு Wed, 28 Jul 2010 23:44:11 +0000 tamilmurasuweb 8617 at http://tamilmurasu.com.sg அநாகரிகமான வார்த்தைகளை ஜெயலலிதா நிறுத்தவேண்டும்: கருணாநிதி http://tamilmurasu.com.sg/node/8616
தமிழக முதல்வர் கருணாநிதி தமக்கு எதிரான அநாகரிகமான வார்த்தைகளை நிறுத்த வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவியும் அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவை கேட்டுக் கொண்டார்.

தஞ்சாவூர் திலகர் திடலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற திமுக பொதுக் கூட்டத்தில் பேசிய முதல்வர் கருணாநிதி, “குடும்பத்துடன் திருவாரூரில் இருந்து டிக்கெட் இல்லாமல் ரயில் ஏறி வந்ததாக ஜெயலலிதா கூறியிருக்கிறார். நான் அப்படி பயணம் செய்ததே கிடையாது,” என்றார்.

“நான் அவரை ஜெயலலிதா அம்மையார் என்றுதான் கூறி வருகிறேன். ஆனால், அவர் என்னை கருணாநிதி என்றே பெயரைச் சொல்லி பேசுகிறார்,” என்றும் திரு கருணாநிதி சொன்னார்.
முக‌ப்பு Wed, 28 Jul 2010 23:42:32 +0000 tamilmurasuweb 8616 at http://tamilmurasu.com.sg அசின் படங்களுக்குத் தடை: உலகத் தமிழ் அமைப்பு http://tamilmurasu.com.sg/node/8615
அசின் நடித்த அனைத்து திரைப்படங்களையும் புறக்கணிக்க அமெரிக்காவில் செயல்பட்டு வரும் உலகத்தமிழ் அமைப்பு முடிவெடுத்துள்ளது.

அமெரிக்கா, கனடா நாடுகளில் இந்த முடிவை நிறைவேற்றுவோம் என்று அதன் தலைவர் நாஞ்சில் பீட்டர், வடஅமெரிக்க தமிழ் சங்க பேரவை தலைவர் பழனிசுந்தரம் ஆகியோர் நடிகர் சங்கத்துக்கு அனுப்பிய அறிக்கையில் கூறியதாக இந்தியச் செய்திகள் கூறுகின்றன.

நடிகை அசின் இந்தி படப்பிடிப்புக்காக இலங்கை சென்றது சர்ச்சையைக் கிளப்பியது.

ராஜபக்சே மனைவியுடன் யாழ்ப்பாணம், வவுனியா போன்ற தமிழர் பகுதிகளுக்கு சென்றது திரைப்பட அமைப்பினருக்கு மேலும் ஆத்திரமூட்டியது. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வற்புறுத்தப்பட்டன.

நடிகர் சங்க பொதுக்குழுவில் அசின் விவகாரம் பற்றி விவாதிக்கப்பட்டது.

ராதாரவி, சத்யராஜ் இருவரும் அசின் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வற்புறுத்தினார்கள்.

இனிமேல் நடிகர்-நடிகைகள் இலங்கை செல்வதாக இருந்தால் நடிகர் சங்கத்திடம் அனுமதி பெற வேண்டும்;

தொழில் ரீதியாகவோ, தனிப்பட்ட முறையிலோ இலங்கை செல்லும் நடிகர்களை யாரும் தடுக்க கூடாது என்றும் தென்னிந்திய நடிகர் சங்கம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

இந்தத் தீர்மானத்துக்கு அசின் பதில் அளித்தபோது மன்னிப்பு கேட்க மாட்டேன். இனிமேல் தமிழ் படத்தில் நடிக்கக் கூடாது என்று நடிகர் சங்கம் தடை விதித்தால், தமிழ் படத்தில் நடிக்க மாட்டேன் என்று கூறியதாக செய்திகள் வெளியாயின.
அசின் ஆணவமாக பேசுவதாக நடிகர் சங்க நிர்வாகிகள் ஆத்திரப்பட்டனர்.

இதற்கு அசின் விளக்கம் அளித்துள்ளார். மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று சொல்லவில்லை என்றும் நான் சொல்லாததை செய்தியாக வெளியிட்டு என் மீது அவதூறு பரப்பியுள்ளனர் என்று பதிலளித்துள்ளார்.

இதற்கிடையே இலங்கை செல்வதால் எஸ்.எம்.எஸ். மூலம் தனக்கு மிரட்டல் விடுக்கப்படுவதாக நடிகர் கருணாஸ் போலிசில் புகார் தெரிவித்துள்ளார்.
முக‌ப்பு Wed, 28 Jul 2010 01:04:50 +0000 tamilmurasuweb 8615 at http://tamilmurasu.com.sg நாடாளுமன்றத்தை முடக்குவோம்: பாஜக எச்சரிக்கை http://tamilmurasu.com.sg/node/8614
விலைவாசி உயர்வு தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதிக்க ஒத்தி வைப்பு தீர்மானம் கொண்டு வரப்படும் வரையில் அவையை இயங்க விடமாட்டோம் என்று பாரதிய ஜனதா கட்சி எச்சரித்துள்ளது.

ஒத்தி வைப்புத் தீர்மானத்தின் முடிவில் வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்றும், தங்களது கோரிக்கைக்கு இதர முக்கிய எதிர்க்கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன என்றும் அக்கட்சி கூறியுள்ளது.

“விலைவாசி உயர்வுப் பிரச்சினை, பாப்ளி அணை விவகாரம் என பல விஷயங்களில் மத்திய அரசின் செயல்பாடு திருப்திகரமாக இல்லை. நாடாளுமன்றத்தில் ஒத்திவைப்புத் தீர்மானம் கொண்டு வருவதில் எந்தத் தவறும் இல்லை,” என்றார் தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு.

இதனிடையே முன்பே நாடாளுமன்ற அவையில் விவாதிக்கப்பட்ட பழைய பிரச்சினைகள் குறித்து மீண்டும் ஒத்தி வைப்புத் தீர்மானம் கொண்டு வந்து விவாதிக்கத் தேவையில்லை என்று சபாநாயகர் மீராகுமார் எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கூறியிருப்பதாகத் தெரிகிறது. எனினும் ஒத்திவைப்புத் தீர்மானம் குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் நாடாளுமன்ற சபாநாயகருக்கு உண்டு.

கடைசியாகக் கிடைத்த தகவல்களின்படி இன்று (புதன்கிழமை) விலைவாசி உயர்வு குறித்து நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு இன்றி விவாதம் நடத்த மத்திய அரசு ஒப்புக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

எனினும் வாக்கெடுப்புடன் கூடிய விவாதத்தையே எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.

அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளித்து வந்த மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியும் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வரப்பட வேண்டும் என்று கருத்து தெரிவித்திருப்பது மத்திய அரசுக்கும் காங்கிரசுக்கும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.
முக‌ப்பு Wed, 28 Jul 2010 01:04:16 +0000 tamilmurasuweb 8614 at http://tamilmurasu.com.sg இலங்கைக்கு அதிகாரியை அனுப்புகிறது இந்தியா http://tamilmurasu.com.sg/node/8613
தமிழர்கள் நிலவரத்தை ஆய்வு செய்ய, இந்திய வெளியுறவுத்துறை உயர் அதிகாரி ஒருவர் விரைவில் இலங்கை செல்வார் என இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வர் கருணாநிதிக்கு எழுதியுள்ள ஒரு கடிதத்தில் இந்தத் தகவலை மன்மோகன் வெளியிட்டுள்ளார்.

இலங்கையில் தமிழர் மறுகுடியேற்ற நடவடிக்கைகள் திருப்திகரமாக இல்லை. இன்னும் ஆயிரக்கணக்கான தமிழர்கள் சொந்த ஊர்களில் குடியேற முடியாமல் தவித்து வருகின்றனர்.

எனவே உண்மை நிலவரத்தை ஆராய்வதற்காக சிறப்புத் தூதரை அங்கு அனுப்பி உண்மை நிலையை கண்டறிய வேண்டும் என பிரதமருக்கு முதல்வர் கருணாநிதி கோரிக்கை விடுத்து கடிதம் எழுதியிருந்தார்.
இதற்கு பிரதமர் பதில் அனுப்பியிருந்தார்.

இலங்கையின் வடகிழக்குப் பகுதிகளில் இயல்பு வாழ்க்கை திரும்புவதற்கு இந்தியா உதவி வரும் நிலையில், அந்தப் பணிகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து இலங்கை செல்லும் இந்திய உயரதிகாரி ஆராய்வார்.

கொழும்பு செல்லும் இந்திய அதிகாரி அங்குள்ள இந்தியத் தூதர் மற்றும் இலங்கை அரச தரப்பினருடன் விரிவான பேச்சுவார்த்தைகளை நடத்துவார்.

வடக்கு மற்றும் வட கிழக்கு பகுதிகளுக்குச் சென்று பார்வையிடுவார் என பிரதமர் மன்மோகன்சிங் தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன

இலங்கையில் வடகிழக்கு நிலை குறித்து இந்தியா கொண்டுள்ள ஆழ்ந்த அக்கறையினை உயர் அதிகாரியின் பயணம் வெளிப் படுத்துகிறது எனவும் டாக்டர் மன்மோகன் சிங் கூறியுள்ளதாக அச்செய்திகள் தெரிவித்தன.
முக‌ப்பு Wed, 28 Jul 2010 01:03:46 +0000 tamilmurasuweb 8613 at http://tamilmurasu.com.sg ஆப்கான். கிளர்ச்சியில் பாகிஸ்தானுக்குத் தொடர்பு http://tamilmurasu.com.sg/node/8609
ஆப்கானிஸ்தான் கிளர்ச்சிப் படை களுக்கு எதிராக அமெரிக்கா தலைமையிலான கூட்டணிப் படைகள் போரிட்டு வருகின்றன.
இதில் தலிபான் கிளர்ச்சிக்காரர் களுக்கு பாகிஸ்தான் உளவுத் துறை நேரடியாகவே உதவி செய்கிறது என்று நேற்று வெளிடப்பட்ட ரகசிய ஆவணங்கள் தெரிவிப்பதாக பிரிட்டனின் டெலிகிராஃப் பத்திரிகை கூறுகிறது.

இதில் ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமித் கர்சாயைக் 2008ம் ஆண்டு கொல்ல மேற்கொள்ளப்பட்ட திட்டத்திலும் பாகிஸ்தான் உளவுத் துறைக்கு தொர்பு இருப்ப தாகத் தெரிகிறது.
முக‌ப்பு Tue, 27 Jul 2010 00:42:06 +0000 tamilmurasuweb 8609 at http://tamilmurasu.com.sg புதிய நிர்வாகக் குழுவிடம் சிவ கிருஷ்ண ஆலயம் http://tamilmurasu.com.sg/node/8597
நிதி ஒழுங்கீனங்கள் தொடர்பாக விசாரிக்கப்பட்ட { சிவ கிருஷ்ண ஆலயம், புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகக் குழுவினரிடம் சென்ற வாரம் ஒப்படைக்கப்பட்டது.

ஆலயத்தின் நிதி விவகாரங்களை இந்து அறக்கட்டளை வாரியம் சில காலமாக நிர்வகித்து வந்தது.
மார்சிலிங்கில் உள்ள இவ்வாலயத்தின நிதி ஒழுங்கீனங்கள் தொடர்பாக அறப்பணிகள் ஆணையாளர் இவ்வாண்டு பிப்ரவரி மாதம் விசாரணை தொடங்கினார். விசாரணையின் முடிவுகள் சென்ற வியாழக்கிழமை வெளியிடப்பட்டன.

சென்ற 2007 ஜனவரிக்கும் 2008 ஜூலைக்கும் இடையில் ஆலயத்தின் நிதிநிலையில் கடுமையான ஒழுங்கீனங்கள் நடந்ததாக விசாரணையில் தெரிய வந்தது.

அச்சமயத்தில், அப்போதைய தலைவர் திரு ஆறுமுகம் சிவலிங்கம், ஆலயத்திற்குக் கிடைத்த நன்கொடை பணம், தங்கம் ஆகிய அனைத்தையும் தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்ததாக விசாரணை கண்டுபிடித்தது.

ஒருமுறை, உறுப்பினர்களை ஆலோசிக்காமல், கட்டுமானப் பணியின் குத்தகை மதிப்பு $70,000ல் இருந்து $140,000 ஆக திரு ஆறுமுகம் உயர்த்தியதாகவும் விசாரணையில் தெரியவந்தது. முறையான கணக்கேடுகளும் கட்டிக்காக்கப்படவில்லை.

“ஆலயம் இப்போது சமூகத்திடம் திரும்பி வந்துவிட்டது” என்று 15 உறுப்பினர் கொண்ட புதிய நிர்வாகக் குழுவின் தலைவரான வழக்கறிஞர் திரு கே.ஜெயகுமார் கூறினார்.

புதிய குழு ஏப்ரல் மாதம் தேர்ந்தெடுக்கப்பட்டது. ஆனால், ஆலயம் அப்போது விசாரணையின் கீழ் இருந்ததால், புதிய குழுவுக்கு முழுமையான கட்டுப்பாட்டு கிடைக்கவில்லை.

இந்து அறக்கட்டளை வாரியம் ஆலயத்தின் நிர்வாகப் பொறுப்பைப் புதிய குழுவிடம் சென்ற வாரம் ஒப்படைத்தது.
நிதி ஒழுங்கீன விவகாரம் இப்போது போலிசாரால் விசாரிக்கப்படுகிறது. புலன் விசாரணைக்கு உதவுமாறு புதிய குழுவுக்குச் சென்ற வாரம் கடிதம் அனுப்பப்பட்டது.

இந்நிலையில், திரு ஆறுமுகத்தை ஆலய அறங்காவலர் பொறுப்பிலிருந்து நீக்க, அறப்பணிகள் சட்டத்தின் கீழ் அறப்பணிகள் ஆணையாளர் நடவடிக்கை தொடங்கியிருக்கிறார்.
முக‌ப்பு Sun, 25 Jul 2010 23:45:01 +0000 tamilmurasuweb 8597 at http://tamilmurasu.com.sg மல்லேஸ்வரி காமப் புகாரை அடுத்து பயிற்சியாளர் நீக்கம் http://tamilmurasu.com.sg/node/8596
இந்தியாவில் காமன்வெல்த் விளையாட்டுகள் தொடங்க இருக்கும் வேளையில், ஒவ்வொரு விளையாட்டாக காமப் புகார்கள்
தலைகாட்டி வருகின்றன.

இந்திய பெண்கள் ஹாக்கி பயிற்றுவிப்பாளர் காமக் கரத்தை நீட்டி இருக்கிறார் என்று புகார்கள் எழுந்து அதனால் ஏற்பட்ட பெரும் பரபரப்பு தணிவதற்குள் பளுதூக்கும் விளையாட்டில் காமப் புகார்கள் கிளம்பி இருக்கின்றன.

பளு தூக்கும் அணி பயிற்சி யாளர் ரமேஷ் மல்கோத்ரா இளம் வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக, பிரபல பளு தூக்கும் வீராங்கனையும் சிட்னி ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கம் பெற்றவருமான மல்லேஸ்வரி புகார் தெரிவித்துள்ளார்.

“ரமேஷ் மல்கோத்ரா கடந்த 10 ஆண்டுகளாகவே இளம் வீராங்கனைகளுக்கு காமத் தொல்லை கொடுத்து வருகிறார்.
“இது பற்றி நான் ஏற்கனவே பளு தூக்கும் சங்கத்திடம் புகார் கொடுத்தேன்.

“அவர் மீது நடவடிக்கை எடுப்பார்கள் என்று எதிர்பார்த்தேன். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மனதார அவருக்கு துரோணாச் சாரியார் விருதுக்கு சிபாரிசு செய்துள்ளனர்,” என்று மல்லேஸ்வரி தனது புகாரில் தெரிவித்தார்.

புகாரை அடுத்து, ரமேஷ் மல்கோத்ரா பயிற்சியாளர் பதவியில் இருந்து உடனடியாக நீக்கப்பட்டார். புகார் தொடர்பாக விசாரிக்க ஏற்படுத்தப்பட்டுள்ள மூவர் குழு ஒரு வாரத்தில் அறிக்கை தர வேண்டும் என்று உத்தரவிடப் பட்டுள்ளது.
முக‌ப்பு Sun, 25 Jul 2010 23:44:15 +0000 tamilmurasuweb 8596 at http://tamilmurasu.com.sg நதிகளை இணைக்க திமுக வலியுறுத்து http://tamilmurasu.com.sg/node/8595
தென்னிந்திய நதிகளை இணைக்கப் பேச்சு வார்த்தையைத் தொடங்கும்படி மத்திய அரசுக்குத் தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

தமிழக முதல்வர் கருணாநிதி சார்பாக, புதுடெல்லியில் சனிக்கிழமை நடந்த தேசிய வளர்ச்சி மன்றத்தின் 55-வது கூட்டத்தில் பங்கேற்ற துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழகத்துக்குள் ஓடும் நதிகளை இணைப்பதற்கான திட்டங்களை மாநில அரசு வகுத்துள்ளது என்றும் சொன்னார்.

அந்தத் திட்டத்தை நிறைவேற்றப் பணத்தை ஒதுக்குமாறு மத்திய அரசை அவர் கேட்டுக்கொண்டார்.
அதோடு, “மாநிலங்களுக்கு இடையே ஓடும் நதிகளை குறிப்பாக தென் மாநிலங்களுக்கு இடையிலான நதிகளை இணைக்க வேண்டும். இதற்கான பேச்சு வார்த்தைக்கான முயற்சியை மத்திய அரசு எடுக்க வேண்டும்,” என்றும் திரு ஸ்டாலின் கோரினார்.

நதிகளை இணைக்க வேண்டும் என்பது மத்திய அரசில் இடம்பெற்றுள்ள திமுகவின் இலட்சியங்களில் ஒன்று. அந்தக் கோரிக்கையை நிறைவேற்றப்போவதாக காங்கிரஸ் கட்சி முன்பு வாக்குக் கொடுத்தது.

ஆனால் அக்கட்சியின் பொதுச் செயலாளரும் வருங்காலத் தலைவருமான ராகுல் காந்தி, நதிகளை இணைப்பது சாத்தியமில்லாத ஒன்று என்றும் அந்த திட்டம் தனக்கு ஒத்துவராத ஒன்று என்றும் பிறகு தெரிவித்தார்.

இதையடுத்து நதி இணைப்பு பேச்சு தற்காலிகமாக ஓய்ந்து இருந்தது. என்றாலும் புதுடெல்லி தலைநகரிலேயே திமுக நதி இணைப்புப் பிரச்சினையைக் கிளப்பி இருப்பது குறிப்பிடத்தக்கது என்று கவனிப்பாளர்கள் சொல்கிறார்கள்.
முக‌ப்பு Sun, 25 Jul 2010 23:43:39 +0000 tamilmurasuweb 8595 at http://tamilmurasu.com.sg