திரைச்செய்தி

பார்த்திபன் படத்தில் பாட்டுப் பாடும் சிம்ரன்
20/04/2014

தமிழில் நேருக்கு நேர், நட்புக்காக, துள்ளாத மனமும் துள்ளும், வாலி, பஞ்ச தந்திரம், உட்பட ஏராளமான ஹிட் படங்களில் நடித்தவர் சிம்ரன். இவர் 2003–ல் தீபக் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு சொத்துச் சந்தை தொழிலில் இறங்கினார். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றார். தற்போது சினிமாவில் பின்னணி பாடகியாக மாறி இருக்கிறார்.

ஜில்லா திரைப்படத்தின் 100வது நாள் விழா
20/04/2014

‘ஜில்லா’ திரைப் படத்தின் 100வது நாள் விழாவில் நடிகர் விஜய், இயக்கு- நர் நேசன், தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி, படத்தில் நடித்த மகத், சூரி, இசையமைப்பாளர் இமான், கவிஞர் வைரமுத்து உள்ளிட்ட இப்படத்தில் பணியாற்றிய கலைஞர்கள் கலந்து கொண்டனர்.

நஸ்ரியா
19/04/2014

வருங்கால மாமியாருக்குத் தினமும் போன் செய்து தாஜா செய்கிறார் நஸ்ரியா என்றார் பஹத் பாசிலின் சகோதரரான நடிகர் பர்ஹான். இயக்குநர் பாசில் மகன் பஹத் பாசில்-நஸ்ரியா திருமணம் வரும் ஆகஸ்ட் மாதம் ஆலப்புழாவில் நடக்க உள்ளது.

அனுபவம் தந்த நடிப்பு - சினேகா
19/04/2014

ஒரு புது படத்தில், முதன் முறையாக வலியைத் தன் முகத்தில் வெளிப்படுத்தி நடித்துள்ளார் சினேகா. “இனிமேல் நான் நடிக்கிற ஒவ்வொரு பாத்திரமும் பேசப்பட வேண்டும் என்று நினைக்கிறேன்.

சிவகார்த்திகேயனுடன் நடிக்க நயன்தாரா ஆசை
18/04/2014

நயன்தாரா இயக்குநர் பாண்டிராஜுக்கு ஒரு அறிவுரை கொடுத்திருக் கிறாராம். “நீங்க இயக்கிக் கொண்டிருக்கும் ‘இது நம்ம ஆளு’ படத்தை அப்படியே எடுத்து ஓர மாக வைத்துவிடுங்கள். சி வ கா ர் த் தி கே ய னை வைத்து ஒரு படத்தை உடனே ஆரம்பிங்க. நான் கால்ஷீட் தர்றேன்,” என்பதே அந்த அறிவுரை.

சம்பளம் தராத பிரகாஷ்ராஜ்?
18/04/2014

பேசிய சம்பளம் முழுமையாக வரா விட்டால் படப்பிடிப்பாவது, டப்பிங்கா வது? கைபேசியை அணைத்து வைத்துவிட்டு கண்ணாமூச்சு காட்டுவார் பிரகாஷ்ராஜ். இப்படி மற்றவர்களிடம் கறாராக இருப்பவர், தானே தயாரிக்கும் படத் தில் வேலை செய்கிறவர்களை எப்படி பார்த்துக் கொள்கிறார்? முந்தைய படமல்ல, அதற்கு முந்தைய படத்தில் வேலை செய்தவர் களுக்கு கூட சம்பள பாக்கியாம்.

சந்தானம்
17/04/2014

சந்தானம் தனி நாயகனாக நடிக்கும் படம், ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’. மும்பை மாடல் அஷ்னா சவேரி நாயகி. பிவிபி நிறுவனத் தயாரிப்பு, பெரிய பட்ஜெட் படமென பல நாயகர்களுக்கு காதில் புகையை வரவழைத்துக் கொண்டிருக்கிறார்.

தெலுங்கு ‘மரியாதை ராமண் ணா’வின் மறுபதிப்புதான் என்றா லும் தமிழுக்கும், சந்தானத்துக்கும் ஏற்றதுபோல் கொஞ்சம் கதையை மாற்றி இருக்கிறார் இயக்குநர் {நாத். சந்தானத்தின் வசனங்களை யும் அவரே எழுதியிருக்கிறார்.

பணி வே று; பாசம் வேறு
17/04/2014

தேசிய அளவில் கவனம் ஈர்க்கும் எண்ணத் தில்தான் தொடர்ந்து இந்தியில் நடிக்கிறீர் களா? அப்படியெல்லாம் இல்லை. இந்திப் படங்களில் நடித்தால்தான் தேசிய அங்கீ காரம் கிடைக்கும் என்று எந்த விதியும் இல்லை.

எந்த மொழிப் படமாக இருந்தாலும், ரசிகர்களுக்குப் பிடித்திருந்தால் அவர்கள் மனதில் இடம்பிடித்துவிட முடியும். தமிழ், தெலுங்கு படங்கள் கூட பாலிவுட்டில் பெரிய அளவு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கு. தமிழில் வெற்றி பெற்ற ‘ரமணா’ இப்போது ‘கப்பார்’ என்று இந்தியில் மறுபதிப்பு ஆகிறது. அந்தப் படத்தில் அக்ஷய்குமார் ஜோடியாக நடித்திருக்கிறேன்.

கேட்பதில் தவறு இல்லையே - கனிகா
16/04/2014

திருமணத்திற்குப் பிறகு தமிழ்ச் சினிமா முழுமையாகக் கைவிட்ட பிறகு மலையாளத்தில் நடித்து வருகிறார் கனிகா. தமிழில் வாய்ப்பு வந்தாலும் கவர்ச்சியாக நடிக்கச் சொல்கிறார்களாம். அதனால் தேடி வரும் வாய்ப்புகளையும் தவிர்த்துவிடுகிறார். “தமிழை விட மலையாளத்தில் எனக்கு கிடைக்கும் வாய்ப்புகள் சிறப்பாகவும் வசதியாகவும் இருக்கிறது.

கல்யாணம் ஆகிவிட்டது என்றால் தமிழில் ஒதுக்குகிறார்கள். பாரபட்சமாக நடந்து கொள்கிறார்கள். என்னுடைய திருமணத்திற்கு முன் வந்த நல்ல வாய்ப்புகளை விட, அதற்குப்பின் வந்த கதாபாத்திரங்கள்தான் கடுப்பேற்றிவிட்டது.

மீண்டும் நடிக்க வருகிறாராம் ஜோதிகா
16/04/2014

ஜோதிகா நடித்த ‘மொழி’ திரைப் படத்தை பார்த்த விஐபிகள் பலர் அந்தப் படம் தொடர்பான விழா ஒன்றில் ‘இவ்வளவு அற்புதமான நடிகையை சூர்யா தொடர்ந்து நடிக்க அனுமதிக்கணும்... ’ என்று கூறினார்கள்.

அப்போது லேசாக சிரித்து மழுப்பிய சூர்யா, இத்தனை காலம் கழித்து அவர்களின் ஆசையை நிறைவேற்றப் போகிறார். அதற்காக ஜோதிகா தொடர்ந்து நடிப்பார் என்று அர்த்தமல்ல.

Syndicate content