சீனா

பெய்ஜிங்: கூரைப் பகுதியில் அபின் மலர்ச் செடிகளை வளர்த்த மாது ஒருவருக்கு ஆறு மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மணிலா: பிலிப்பீன்ஸ் ராணுவ உயரதிகாரியுடனான (அட்மிரல்) தொலைபேசி உரையாடல் கசிந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் சீனாவின் தூதர்கள் நாட்டைவிட்டு வெளியேறுமாறு பிலிப்பீன்சின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் வெள்ளிக்கிழமையன்று (மே 10) உத்தரவிட்டதாக ராய்ட்டர்ஸ் செய்தி தெரிவித்தது.
லாரன்ஸ் வோங்கும் அவரது நான்காவது தலைமுறைக் குழுவும் தலைமை ஏற்கும்போது, சில நாடுகள் அவர்களின் மீள்திறனைச் சோதித்துப் பார்க்க முயலலாம். அப்போது, சிங்கப்பூர் பதிலளிக்க தயாராக இருக்க வேண்டும் என்று பிரதமர் லீ சியன் லூங் கூறினார்.
பெய்ஜிங்: சீனாவின் தென்மேற்குப் பகுதியில் உள்ள செங்னான் மருத்துவமனையில் ஆடவர் ஒருவர் கத்தியைப் பயன்படுத்தி அங்கிருந்த பலரைத் தாக்கினார்.
சிட்னி: வடகொரியா மீதான ஐக்கிய நாடுகள் சபையின் பொருளியல் தடைகளை அமல்படுத்தும் நடவடிக்கையில் பங்கேற்றதால், சீன ராணுவத்தால் அனைத்துலக வான்வெளியில் ஆஸ்திரேலிய தற்காப்புப் படை ஆபத்தில் சிக்குவது ஏற்றுக்கொள்ள முடியாதது என்று ஆஸ்திரேலியப் பிரதமர் ஆன்டனி ஆல்பனிஸ் செவ்வாய்க்கிழமை (மே 7) கூறினார்.