குடிநுழைவு

சிங்கப்பூருக்கு வரும் வெளிநாட்டுப் பயணிகள் அனைவரும் சாங்கி விமான நிலையத்தில் தற்போது தானியக்கக் குடிநுழைவு முறையைப் பயன்படுத்த முடியும்.
புத்ராஜெயா: ஜூன் 1ஆம் தேதி முதல் குறைந்த அளவு அபாயம் உள்ள நாடுகள் என்று அடையாளம் காணப்பட்டுள்ள 36 நாடுகளிலிருந்து மலேசியா வருவோர் தங்கள் பாஸ்போர்ட்டை காண்பித்து அந்நாட்டின் தனியங்கி குடிநுழைவு முறையைப் பயன்படுத்தி உள்ளே வர அனுமதி பெறலாம்.
ஜோகூர் பாரு: சிங்கப்பூரில் உள்ள தொழிற்சாலைகளில் பணியாற்றும் மலேசியர்களுக்கு வசதியாக, ஜோகூர் சோதனைச்சாவடிகளில் கியூஆர் குறியீட்டுக் குடிநுழைவு முறை ஜூன் மாதம் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது.
மே மாதம் 13ஆம் தேதியிலிருந்து சிங்கப்பூருக்குள் நுழையும், சிங்கப்பூரிலிருந்து புறப்பட்டுச் செல்லும் பயணிகள் $20,000க்கும் அதிகமான பணம் வைத்திருந்தால் அதுகுறித்து இணையம் மூலம் தகவல் தெரிவிக்க வேண்டும்.
ஜோகூர் பாரு: சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் இடையிலான இரண்டு நிலவழிச் சோதனைச்சாவடிகளில் கியூஆர் குறியீட்டுக் குடிநுழைவு முறை சுமுகமான முறையில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று அவ்வழியாக அடிக்கடி பயணம் செய்பவர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.