தாக்குதல்

பெய்ஜிங்: திருடன் என்ற சந்தேகத்தில் 10 வயதுச் சிறுவனைத் தொலைபேசிக் கம்பம் ஒன்றில் கட்டிப்போட்டு ஊர்மக்கள் மின் கம்பிவடங்களால் அடித்த சம்பவம் சீனாவில் நடந்துள்ளது.
பெட்டாலிங் ஜெயா: மலேசியாவில் பள்ளி ஒன்றின் சேமிப்பு அறையில் 48 வயதான ஆசிரியர் ஒருவர் புகைபிடித்துள்ளார். அவரின் இச்செயலைக் கண்ட நான்கு மாணவர்களை அவர் அறைந்து, குத்தி, கழுத்தை நெரித்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து அவ்வட்டாரக் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோலாலம்பூர்: முதலில் மே 2ஆம் தேதி திரங்கானு காற்பந்துக் குழு விளையாட்டாளர் அக்யார் ரஷிட், தமது வீட்டுக்கு வெளியில் நடந்த திருட்டுச் சம்பவத்தில் காயமடைந்தார்.
சிட்னி: வடகொரியா மீதான ஐக்கிய நாடுகள் சபையின் பொருளியல் தடைகளை அமல்படுத்தும் நடவடிக்கையில் பங்கேற்றதால், சீன ராணுவத்தால் அனைத்துலக வான்வெளியில் ஆஸ்திரேலிய தற்காப்புப் படை ஆபத்தில் சிக்குவது ஏற்றுக்கொள்ள முடியாதது என்று ஆஸ்திரேலியப் பிரதமர் ஆன்டனி ஆல்பனிஸ் செவ்வாய்க்கிழமை (மே 7) கூறினார்.
திருநெல்வேலி மாவட்டம் நாங்குனேரியில் கடந்த ஆண்டு சக மாணவர்களால் தாக்கப்பட்ட மாணவர் சின்னத்துரை 12ஆம் வகுப்பு அரசு பொது தேர்வில் (+2) 469 மதிப்பெண்கள் வாங்கியுள்ளார்.