செல்லப் பிராணி

செல்லப்பிராணிகளை வீட்டில் வளர்க்கும் போது வீடுகளைச் சுத்தமாக வைத்துக்கொள்வது மிக அவசியம்.
சென்னை: சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களில் செல்லப் பிராணிகள் வளர்ப்பதற்கான உரிமம் பெறுவதற்கு கடந்த 3 நாள்களில் 2,300 பேர் விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த விண்ணப்பங்களை உரிய முறையில் பரிசீலித்து உரிமம் வழங்குவதற்கான நடவடிக்கைகளில் சென்னை மாநகராட்சி ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகளில் செல்லப் பிராணிகளாகப் பூனைகளை வைத்திருக்க விரும்புவோருக்கான புதிய கட்டமைப்பு அறிமுகப்படுத்தப்படுகிறது.
சென்னை: ராட்வைலர் உள்ளிட்ட 23 வகையான நாய் இனங்கள், அவைகளின் கலப்பினங்கள் இறக்குமதி செய்வதற்கும், இனப்பெருக்கம் செய்வதற்கும், வளர்ப்புப் பிராணிகளாக விற்பனை செய்வதற்கும், இவைகளின் எல்லா வகை பயன்பாடுகளும் தடை செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
செல்லப்பிராணிகளுக்காக வீட்டிலிருந்து இயங்கிய சிகை திருத்தும் வர்த்தகம் ஒன்று, அதன் சேவையை நாடியவரது நாயைத் தொலைத்துவிட்டது. அந்த நாய் பின்னர் சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்தது.