அணுவாயுதம்

ஹாங்காங்: அணுவாயுதங்களைப் பயன்படுத்துவது தொடர்பான முடிவுகள் யாவையும் மனிதர்களே எடுக்க வேண்டும் என்றும் ஒருபொழுதும் செயற்கை நுண்ணறிவிடம் அம்முடிவை விடவேண்டாம் என்றும் சீனாவுக்கும் ரஷ்யாவுக்கும் மூத்த அமெரிக்க அதிகாரி அறிவுறுத்தியுள்ளார்.
சோல்: வடகொரியா, நீருக்கடியில் செயல்படக்கூடிய அணுவாயுதங்களைச் சோதித்ததாகத் தெரிவித்துள்ளது.
லண்டன்: ஈரான் அணு ஆயுதச் சாதனங்கள் தொடர்பிலான விவகாரங்களைத் தெள்ளத் தெளிவாக விளக்கவில்லை என்றால், சட்டபூர்வமான தனது பொறுப்புகளை நிறைவேற்றவில்லை என்றால் அந்த நாட்டுக்கு எதிராக மேலும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய தேவை ஏற்படும் என்று அமெரிக்கா, ஜெர்மனி, பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகள் அனைத்துலக அணுசக்தி முகவையிடம் தெரிவித்து உள்ளன.
சோல்: வடகொரியாவை ஓர் அணுவாயுத சக்தியாக உலகம் என்றும் ஏற்றுக்கொள்ளாது என்று தென்கொரிய அதிபர் யூன் சுக்-யுல் கூறியுள்ளார்.
ஹிரோஷிமா: இரண்டாம் உலகப் போரின்போது ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் அமெரிக்கா அணுகுண்டு வீசி 78 ஆண்டுகள் ஆனதைக் குறிக்கும் வகையில் ஞாயிற்றுக்கிழமை அங்கு அஞ்சலி நிகழ்ச்சி நடத்தப்பட்டது.