புத்தாண்டு

பருவங்கள் மாறி மாறி வருகையில் ஏதோ ஓர் இடத்தில் தொடங்கி மறுபடியும் அவ்விடத்தையே அடைகிறது என்பதைக் கண்கூடாக அறிய முடிகிறது. தொடக்கமென்பது ஒரு மறுமலர்ச்சியை, புத்துணர்வை, மகிழ்ச்சியைக் கொடுக்ககூடியதாக அமைவதையே மனம் விரும்புகிறது. குளிர்காலம் முடிந்து, தாவரங்கள் துளிர்க்கும் காலம், மலர்கள் பூக்கும் காலம், ஆதவனின் கதிர்கள் பூமிக்கு இதமான வெப்பத்தைப் பரப்பும் காலம் இளவேனிற்காலம். அதுவே தொடக்கமெனப் பல்லாண்டு காலமாய் மனத்தில் தோன்ற சித்திரையே முதல் மாதமானது. நம் கலாசாரத்திற்குத் தெரிந்தது இம்மாதங்கள்தாம். இதனைத் தவிர்த்து, ராசிகளின் அடிப்படையில் மாத வரிசைகள் அமைவதும் உண்டு. அவையும் சித்திரை மாதத்தில்தான் தொடங்குகின்றன. 
எதிர்வரும் சித்திரைப் புத்தாண்டையும் இந்­திய கலாசாரத் திருவிழாவையும் சிறப்பாகக் கொண்டாட ‘லிஷா’ எனும் லிட்டில் இந்தியா வர்த்தகர்கள் மற்றும் மரபுடைமைச் சங்கம் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளது.
சீனப் புத்தாண்டுக்கு முந்திய மாபெரும் விருந்து சீனர்களின் வீட்டில் தடபுடலாக இருக்கும்.
சிறு வயதில் சிங்க நடனத்தின்மீது எழுந்த ஆர்வம் இன்று 11 ஆண்டுகள் கழித்தும் 23 வயதாகும் பிரின்ஸ் ஷானுக்கு சற்றும் குறையவில்லை.
தெம்பனிஸ் நார்த்தில் உள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழக புளோக் ஒன்றில், சீனப் புத்தாண்டுக்காக ஒரு தம்பதியர் போட்ட கடல்நாகச் சித்திரம் சில நாள்களுக்குப் பிறகு அகற்றப்பட்டது.