வேலைவாய்ப்பு

நீக்குப்போக்கான வேலை ஏற்பாடுகளைக் கொண்ட ஊழியர்களின் உற்பத்தித்திறன் பாதிக்கப்படாவிட்டால் அவர்களின் சம்பளத்தைக் குறைக்க முதலாளிகளுக்கு எந்த அடிப்படையும் இல்லை என்று மனிதவள துணை அமைச்சர் கான் சியாவ் ஹுவாங் செவ்வாய்க்கிழமை (மே 7) தெரிவித்துள்ளார்.
கடந்த சில ஆண்டுகளில் நூற்றுக்கும் மேற்பட்ட கரிமச் சேவைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் சிங்கப்பூரில் அமைக்கப்பட்டுள்ளன. அந்த நிறுவனங்களின் மூலம் குறிப்பிடத்தக்க வகையில் சிங்கப்பூரர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்க முடியும் என மனிதவள அமைச்சர் டான் சீ லெங் வெள்ளிக்கிழமையன்று (மே 3) கூறினார்.
புதுடெல்லி: இந்தியாவில் வேலை கிடைக்காத பட்டதாரிகளின் விகிதம் கூடியுள்ளதாக அண்மையில் ஐநா வெளியிட்ட ஆய்வறிக்கை தெரிவித்தது.
மும்பை: நாட்டில் உள்ள இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் (ஐஐடி) படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தித் தரும் பணி கடந்த ஜனவரியில் தொடங்கியபோதும் இன்னமும் சராசரியாக 30 - 35 விழுக்காடு மாணவர்களுக்கு வேலை கிடைக்கவில்லை.
கடந்த ஆண்டு அதிகரித்த வெளிநாட்டினர் வேலைவாய்ப்பில் பெரும்பகுதி பொதுவாக சிங்கப்பூரர்கள் செய்ய விரும்பாத வேலைகள் என்று மனிதவள அமைச்சர் டான் சீ லெங் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 2) நாடாளுமன்றத்தில் கூறினார்.