பலதுறை மருந்தகம்

சிங்கப்பூரில் உள்ள 25 பலதுறை மருந்தகங்களில் 19ல் ‘மேலும் ஆரோக்கியமான எஸ்ஜி’ பதிவுக்கு இன்னமும் போதுமான இடங்கள் இருக்கின்றன. இருந்தாலும் தனியார் பொது மருந்தகங்களில் பதிவு செய்ய குடியிருப்பாளர்கள் ஊக்குவிக்கப்படுகின்றனர். 700,000க்கும் மேற்பட்டோருக்கு தனியார் பொது மருந்தகத்தில் பதிவு செய்ய வாய்ப்பு இருக்கிறது.
சுகாதாரம், சமூக சேவை ஆகிய இரண்டையும் பற்றி ஒரேநேரத்தில் இளம் குடும்பங்களுக்கு எளிதில் தகவல் தெரிவிக்கும் முயற்சியாக ‘ஃபேமிலி நெக்சஸ்@பொங்கோல்’ திட்டம் துவங்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் டிசம்பர் 3 முதல் 9 வரையிலான வாரத்தில் 56,043 கொவிட்-19 கிருமித்தொற்றுச் சம்பவங்கள் உறுதிசெய்யப்பட்டன. அதற்கு முந்தைய வாரத்தில் பதிவான 32,035 சம்பவங்களைக் காட்டிலும் இது 75% அதிகரிப்பு என்று சுகாதார அமைச்சு டிசம்பர் 15ஆம் தேதியன்று தெரிவித்தது.
திட்டமிடாத கர்ப்பத்தைத் தொடர்ந்து கருக்கலைப்பு செய்ய விழைவோர் எண்ணிக்கை சிங்கப்பூரில் அதிகரித்து வருவதாக சிங்ஹெல்த் பலதுறை மருந்தகங்கள் (எஸ்எச்பி) நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
சிங்கப்பூர் சுகாதாரப் பராமரிப்புக் குழுமமான சிங்ஹெல்த் தன்னுடைய தொலைதூர மருத்துவச் சேவைகளை பலப்படுத்தும் முயற்சிகளின் ஒரு பகுதியாக ஒன்றிணைந்த தொலைதூர சுகாதார மையம் ஒன்றை யூனோஸ் பலதுறை மருந்தகத்தில் அமைக்கிறது.