தப்பியோடிய பயங்கரவாதி மாஸ் செலாமட்டுக்கு அடைக்கலம்: உறவினர் மூவருக்குச் சிறை

Tuesday, November 23rd, 2010

பயங்கரவாத இயக்கமான ஜமா இஸ்லாமியா தலைவன் மாஸ் செலாமட் கஸ்தாரி 2008ம் ஆண்டு பிப்ரவரி 27ம் தேதி விட்லி சாலை தடுப்புக்காவல் நிலையத்திலிருந்து தப்பிய பிறகு, அவருக்கு அடைக்கலம் தந்த மூன்று உறவினருக்குச் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டிருக்கிறது.
உள்துறை அமைச்சர்  கா.சண்முகம் நேற்று நாடாளு மன்றத்தில் இவ் விவரத்தை வெளியிட்டார்.
தடுப்புக்காவல் நிலையத் திலிருந்து தப்பிய மாஸ் செலா மட், தனது சகோதரன் அஸ்மம் குடியிருந்த தெம்பனிஸ் வீட்டில் தங்கியிருந்ததாகத் திரு சண் முகம் விவரித்தார்.
மாஸ் செலாமட் தப்பியோடிய விவகாரம் பற்றி நூற்றுக்கும் மேலானவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
அஸ்மம், அவரது மனைவி ஆய்சா, மகள் நூர் ஆய்னி ஆகிய மூவரும் மாஸ் செலா மட்டுக்குப் பல்வேறு வழிகளில் உதவி செய்தனர்.
“அவருக்குப் பணம் கொடுத்து, உணவளித்து, யாரிட மும் பிடிபடாமலிருக்க பெண் வேடமிடவும் மூவரும் உதவினார் கள். பிப்ரவரி 27ம் தேதி தடுப்புக் காவல் நிலையத்தி லிருந்து தப்பியபிறகு, காட்டுப் பகுதிகள் உட்பட பல்வேறு பொது இடங்களில் முதல் இரு நாட்களுக்கு மாஸ் செலாமட் ஒளிந்திருந்தார். அதன்பிறகு தனது சகோதரனின் வீட்டைத் தேடிச் சென்றார்.
“தனது சகோதரனும் அவரது மனைவியும் ஜோகூரிலுள்ள வீட்டில் தங்கியிருப்பதாகவும், அவர்களது மகன் மகாதீர் வெளியூரில் இருப்பதாகவும், அவர்களின் மகள் நூர் ஆய்னி பிந்தி அஸ்மம் மட்டும் அவ் வீட்டில் தனியாக வாழ்வதாகவும் மாஸ் செலாமட் நினைத் திருந்தார்.
“அஸ்மம் வீட்டில் நூர் ஆய்னி மட்டுமே இருப்பார் என்பதால், சகோதரனின் வீடு தனக்குப் பாதுகாப்பாக இருக்கும் என்று மாஸ் செலாமட் நம்பினார்.
“சகோதரனின் மகள் தனக்கு உதவி செய்வார் என்று அவர் எதிர்பார்த்தார்” என மாஸ் செலாமட் தப்பிய விவரங்களைத் திரு சண்முகம் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
மாஸ் செலாமட் போலி சாரால் தேடப்படுபவர் என்பது தெரிந்தே அவருக்கு அடைக்கலம் அளித்ததற் காக அஸ்மம், அவரது மனைவி ஆய்சா, மகள் நூர் ஆய்னி மூவரும் 2010 நவம்பர் 10ம் தேதி கைது செய்யப்பட்டு குற்றம் சாட்டப்பட்டது.
குற்றச்சாட்டுகளை ஒப்புக் கொண்ட மூவருக்கும் முறையே 12 மாதங்கள், மூன்று மாதங்கள், 18 மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
“அஸ்மமும் அவரது குடும்பத்தி னரும் மாஸ் செலாமட் தப்பிக்க உதவி செய்தது சிங்கப்பூரர் களுக்கு ஏமாற்றமளித்திருக்கும்” என்றார் திரு சண்முகம்.
“மாஸ் செலாமட்டின் செயல் களை ஆதரிக்காமல், அவரைத் தேடும் நடவடிக்கையில் பங்கெடுத்த மலாய்-முஸ்லிம் சமூகத்தினரை இம்மூவரின் செயல்களும் பிரதி பலிக்கவில்லை.
“எனவே, இந்த ஒரு சம்பவத் தால் நமது வெவ்வேறு சமூகத்தினரி டையில் பல ஆண்டுகளாக வளர்க் கப்பட்ட நம்பிக்கையும் நல்லெண் ணமும் பாதிப்படைய நாம் அனு மதிக்கக்கூடாது.  அஸ்மம், அவரது மனைவி ஆய்சா, மகள் நூர் ஆய்னி மூவரும், மாஸ் செலாமட் நாடெங் கிலும் தேடப்படுகிறார் என்பதை அறிந்தே அவருக்கு உதவி செய் தனர். “சென்ற 2008ம் ஆண்டு மார்ச் 1ந் தேதி மாலை, மாஸ் செலாமட் அவர்களது வீட்டிலிருந்து வெளியேறிய பிறகுகூட மாஸ் செலாமட்டைப் பற்றிய விவரங் களை அவர்கள் அதிகாரிகளிடம் தெரிவிக்கவில்லை,” என்கிறார்.

பெண் வேடம் பூண்ட மாஸ் செலாமட்
விட்லி சாலை தடுப்புக்காவல் நிலையத்திலிருந்து தப்பி இரு நாட்களுக்குப் பிறகு, 29.2.2008 அன்று தனது சகோதரனின் தெம்பனிஸ் வீட்டில் இரவுப் பொழுதைக் கழித்த மாஸ் செலாமட், யாராலும் அடையாளம் காணப்படாதிருக்க முக்காடு அணிந்து பெண் வேடமிட்டுக் கொண்டார்.
ஜமா இஸ்லாமியா பயங்கரவாதக் கும்பலின் தலைவன் மாஸ் செலாமட்டுக்கு முக ஒப்பனை செய்யவும், முக்காடு அணிவிக்கவும் அவரது சகோதரனின் மகள் நூர் ஆய்னி பிந்தி அஸ்மம் உதவி செய்ததாக உள்துறை அமைச்சர் திரு கா.சண்முகம் தெரிவித்தார்.
மாற்று உடைகள், பேஸ்பால் தொப்பி, தண்ணீர், தின்பண்டம், ஒளிக்குச்சி (Illumination stick) குட்டித்தடி, இப்பொருட்களை எல்லாம் வைப்பதற்கு காற்றுபுகா பிளாஸ்டிக் பைகள், இவை எல்லாவற்றையும் வைப்பதற்கு முதுகுப் பை போன்றவை உள்ளிட்ட பல்வேறு பொருட்களையும் மாஸ் செலாமட்டுக்கு நூர் ஆய்னி கொடுத்தார். அதோடு, மாஸ் செலாமட் கேட்ட சிங்கப்பூரின் வரைபடத்தையும் நூர் ஆய்னி கொடுத்தார். மலேசியாவின் ஒரு பகுதியும் வரை படத்தில் இடம்பெற்றது.  மாஸ் செலாமட் தங்கிய தெம்பனிஸ் வீடு அவரது சகோதரன் அஸ்மமுக்கும் சகோதரனின் மனைவி ஆய்சாவுக்கும் சொந்தமானது. மார்ச் 1ம் தேதி அதிகாலை நேரத்தில் வேலை முடிந்து வீடு திரும்பியபோதுதான் மாஸ் செலாமட் தனது வீட்டிற்கு வந்திருப்பதை அஸ்மம் தெரிந்து கொண்டார்.  “மாஸ் செலாமட்டுக்கு அடைக்கலம் அளிப்பது தவறு என்பது அவருக்குத் தெரியும். இருந்தாலும், மாஸ் செலாமட் தனது வீட்டில் தங்க அனுமதிக்கத் தீர்மானித்தார்,” என்றார் திரு சண்முகம்.  மாஸ் செலாமட் அவ்வீட்டிலிருந்து புறப்படுவதற்குமுன் S$100 வெள்ளி, 100 ரிங்கிட், மருந்துகள் ஆகியவற்றையும் அஸ்மம் அவருக்குக் கொடுத்து உதவினார்.