பெங்களூரு நீதிமன்ற விசாரணையில் தேம்பித்தேம்பி அழுத சசிகலா

Sunday, February 19th, 2012
sasikala-file

அதிமுக தலைவி ஜெயலலிதாவுக்கு எதிரான பெங்களூரு வழக்கு விசாரணையில் நேற்று பெரும் திருப்பம் ஏற்பட்டது.

அதிமுக தலைவியும்  தமிழக முதல்வருமான  செல்வி ஜெயலலிதா ஓர் அப்பாவி என்று சசிகலா சாட்சியம் அளித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெயலலிதாவும் அவரின் தோழியான சசிகலாவும்  சட்ட விரோதமாக 66 கோடி ரூபாய் சொத்துக்களைக் குவித்ததாகத் தொடுக்கப்பட்டுள்ள வழக்கு விசாரணை பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்துவருகிறது.

அந்த வழக்கின் 2வது குற்றவாளியான சசிகலா நேற்று  நீதிமன்றத்தில் ஆஜரானார்.

 சசியுடன் இளவரசியும் சுதாகர னும் முன்னிலை ஆனார்கள். வழக்கில் தெரிவிக்கப்படும் ஜெயா பப்ளிகேஷன்ஸ் நிறுவனத்தின் வங்கிக் கணக்கைத் தான் மட்டுமே நிர்வகித்து வந்ததாகவும் நிறுவனத் தில் ஜெயலலிதா வெறும் பங்காளி தான் என்றும் சசிகலா சாட்சியம் அளித்தார்.

“இந்த நிறுவனத்தை நான்தான் நிர்வகித்து வந்தேன். இதில் நடந்தவை  எவையும் ஜெயலலிதாவுக்குத் தெரியாது.

“இதில் அவ்வளவாக அவர் நாட்டம் காட்டியதில்லை. இதற்கு நான்தான் முழுப்பொறுப்பாக இருந் தேன். சொத்து வாங்கிய விவரம் அவருக்குத் தெரியாது,” என்று சசிகலா சாட்சியம் அளித்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கில் ஜெயலலிதா முதல் குற்றவாளி. இரண்டாவது குற்றவாளி சசிகலா. இவர் முதன் முதலாக வாக்குமூலம் அளித்தது நேற்றுதான் என்பது குறிப்பிடத் தக்கது.  சசிகலா மிக நிதானமாக பதில் அளித்தார். சில கேள்விகளுக்கு எழுதி வைத்திருந்ததைப் பார்த்து பதில் கூறினார்.
சில கேள்விகள் கேட்டபோது பதில் அளித்த சசிகலா, கண்ணீர் சிந்தி அழுதார்.