இயக்குநர் சங்கர் நல்ல நண்பர்: அசின்
Friday, February 17th, 2012
இந்த நேரம் பார்த்து கமல்ஹாசனின் புதுப் படத்தில் அசின் அவருக்கு ஜோடியாக நடிப்பதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. மற்ற கிசுகிசுக்கள் வெளியான போதெல்லாம் அமைதி காத்த அசின், இந்தச் செய்தியைக் கண்டதும் அதிர்ந்தே போனாராம்.
“இதற்கும் மறுப்பு சொல்லவில்லை என்றால், நானே இப்படியொரு செய்தியை உலவ விட்டதாக பிறகு இன்னொரு கிசுகிசுவும் வெளியாகும். அதனால்தான் இந்த விளக்கம். கமல் சார் படத்தில் அவருக்கு ஜோடியாக என்னை ஒப்பந்தம் செய்திருப்பதாக வெளியான தகவலில் உண்மை இல்லை. அதிலும் அது ஷங்கர் இயக்கும் படம் என்று வேறு செய்தி வெளியிட்டிருக்கிறார்கள். ஷங்கர் சார் என்னுடன் நல்ல நண்பராகப் பழகுகிறார். அவர் மீது எனக்கும் மிகுந்த மரியாதை உண்டு. எங்கேனும் பொது நிகழ்ச்சிகளில் சந்தித்துக் கொண்டால் சிறிது நேரம் பேசுவோம். தவிர என்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் அவரும் ஒரு உறுப்பினர். அவரது வலைதளப் பக்கத்தில் நான் எப்போதே உறுப்பினராகி விட்டேன். வாய்ப்பு கிடைக்கும்போது இணையம் வழியும் பேசிக் கொள்வோம். ஆனால் இதுவரை தன் புதுப் படத்தில் என்னை நடிக்க வைப்பது குறித்து அவர் எதுவுமே சொல்லவில்லை” என்கிறார் அசின்.
ஒருவேளை வாய்ப்பு கிடைத்தால்?
“ஷங்கர் படம் என்றால் எந்த நடிகைதான் மறுக்கப் போகிறார்? நானும் அதற்கு விதி விலக்கல்ல. ஷங்கர் சார் உண்மையாகவே என்னிடம் இதுகுறித்துப் பேசும்போது கை வசம் கால்ஷீட் இருந்தால் நிச்சயமாக அவர் படத்தில் நடிப்பேன். கமல் சாருடன் ஏற்கனவே நடித்த அனுபவம் இருப்பதால் மீண்டும் அவருடன் ஜோடி சேர்வதிலும் எனக்கு மகிழ்ச்சிதான்” என்று உற்சாகம் குறையாமல் சொல்கிறார் அசின்.
முழு விவரம் 17.2.2012 தமிழ்முரசில்



