ஐஃபோனில் நேற்று முதல் இலவச ‘எஸ்எம்ஆர்டி கனக்ட்’ செயலி
Saturday, January 28th, 2012
தனது பயணிகளுக்கு சுமூகமான பயணத்தை வழங்கும் பொருட்டு, எஸ்எம்ஆர்டி நிறுவனம் நேற்று தனது சொந்த ஐஃபோன் செயலியை அறிமுகப்படுத்தியது.
‘எஸ்ஆம்ஆர்டி கனக்ட்’ எனும் பெயர் கொண்ட அந்தச் செயலியை ஐஃபோன் கைத்தோலைபேசி மூலமாக ‘ஏப்பல் எப் ஸ்டோரிலிருந்து’ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
ஆண்ட்ரோயிட் தொலைபேசியைப் பயன்படுத்துபவர்களுக்கு இந்த சேவை இந்த ஆண்டு பிற்பகுதியில் கிடைக்கும் என்று எஸ்எம்ஆர்டி நிறுவனம் தெரிவித்தது.
இந்தச் செயலி மூலம் எஸ்எம்ஆர்டி பேருந்து மற்றும் எஸ்எம்ஆர்டி ரயில்கள் பற்றிய தகவல்களைப் பயணிகள் தெரிந்துகொள்ளலாம் அல்லது எஸ்எம்ஆர்டி டாக்சிகளை முன்பதிவு செய்துகொள்ளலாம்.
‘எஸ்ஆம்ஆர்டி கனக்ட்’ செயலியைக் கொண்டு விளம்பர அறிவிப்புகளில் உள்ள ‘பார்கோட்டை’ பதிந்து பொருட்களை வாங்கக் தொடங்கலாம் என்றும் விளக்கப்பட்டது.
முழு விவரம் 28.1.2012 தமிழ் முரசில்


