‘பத்ம பூஷண்’ விருதை பெறும் முதல் சிங்கப்பூரர் ஜார்ஜ் இயோ; கோபிநாத் பிள்ளைக்கும் விருது

Saturday, January 28th, 2012
 திரு ஜார்ஜ் இயோ.

சிங்கப்பூரின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் திரு ஜார்ஜ் இயோ

- இளவரசி மகேந்திரன் -

சிங்கப்பூரின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஜார்ஜ் இயோ இந்திய அரசால் வழங்கப்படும் உயரிய விருதான ‘பத்ம பூஷண்’ விருதுக்கு  தேர்வு பெற்றுள்ளார்.
விருது குறித்த தகவல் கிடைத்தபோது  திரு இயோ உலக பொருளியல் மாநாட்டில் பங்கேற் பதற்காக சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் இருந்தார்.

விருது கிடைத்திருப்பது பற்றி தெரிவித்த அவர் மிகவும் கௌர வமாக உள்ளது என்று கூறினார்.
இதன் மூலம் இந்திய அரசின் மூன்றாவது மிக உயரிய விருதான பத்ம பூஷண் விருதைப் பெறும் முதல் சிங்கப்பூரர் என்ற பெருமையைப் பெறுகிறார் 57 வயது திரு இயோ. மேலும்  இந்த ஆண்டு பத்ம பூஷண் விருதுக்கு தேர்வாகியுள்ள 27 பேரில் திரு இயோவைத் தவிர மற்ற அனைவருமே இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டிற்கான பத்ம விபூஷன், பத்ம பூஷண், பத்மஸ்ரீ ஆகிய விருதுகளைப் பெறுவோரின் பட்டியலை இந்திய அரசு அண்மையில் வெளியிட்டது.

‘பொது உறவு’ பிரிவிற்கான பத்ம பூஷண் விருது சிங்கப்பூரின் முன்னாள் அமைச்சர் திரு ஜார்ஜ் இயோவிற்கு வழங்கப்படுகிறது.

அதேபோல் ‘வர்த்தகம் மற்றும் தொழிற்துறை’ பிரிவிற்கான ‘பத்ம {’ விருது சிங்கப்பூரின் பொதுத் தூதரும், பிரபல வர்த்தகரும், தெற்காசிய ஆய்வுக் கழகத்தின் இயக்குநருமான திரு கோபிநாத் பிள்ளைக்கு வழங்கப்பட்டுள்ளது.

முழு விவரம் 28.1.2012 தமிழ் முரசில்