ஜெயலலிதாவைச் சந்தித்தார் ரஜினி

Saturday, January 28th, 2012
jaya-rajini-27-01-2012

நடிகர் ரஜினிகாந்த் (இடம்) தமிழக முதல்வர் ஜெயலலிதாவை நேற்று தலைமைச் செயலகத்தில் சந்தித்து ‘தானே’ புயல் நிவாரண நிதிக்காக ரூ.10 லட்சத்திற்கான காசோலையை கொடுத்தார்.
கடந்த டிசம்பர் மாதம் 30ம் தேதி வீசிய ‘தானே’ புயலால் கடலூர், விழுப்புரம், புதுவை பகுதிகளில் பெரும் சேதம் ஏற்பட்டது. 48 பேர் உயிர் இழந்தனர். பலர் வீடுகளை இழந்து தவிக்கின்றனர். ஏராள பயிர்கள் சேதமடைந்தன.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், “முதல்வர் ëஜயலலிதாவை மரியாதை நிமித்தமாகத்தான் சந்தித்தேன். எனது உடல் நலம் தேற வாழ்த்து தெரிவித்ததற்கு நன்றி கூறினேன். விரைவில் புதிய படம் மூலம் எனது ரசிகர்களைச் சந்திப்பேன்,” என்று தெரிவித்தார்.
எனினும் இச்சந்திப்பு நாடாளுமன்ற தேர்தல் கூட்டணிக்கான அடிக்கல் என அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.  படம்: சதீஷ்