முன்னாள் குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிக்கு 10 வாரச் சிறைத் தண்டனை

Friday, January 27th, 2012
POLICE-IDRIS
போலிஸ் துறையில் ஸ்டாஃப் சார்ஜண்ட் பதவியில் இருந்த 37 வயது இட்ரிஸ் மாக்ரோப், சட்ட விரோதமாக வட்டித் தொழில் செய்து வந்த சிலரின் கேளிக்கை விடுதியில் பங்கும் வைத்திருந்தார்.
அந்தக் குற்றத்திற்காக அவருக்கு நேற்று 10 வார சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
அவர் மீது இரண்டு குற்றங்கள் சுமத்தப்பட்டன. ஒன்று, போலிஸ் ஆணையாளரின் அனுமதி பெறாமல் அந்தத் தொழிலில் நுழைந்தது. இரண்டாவது, அவருடடைய கூட்டுப் பங்காளிகளின் சட்ட விரோதமான நடவடிக்கைகளை அதிகாரிகளிடம் தெரிவிக்காமல் இருந்தது.
அதே மாதிரியான வேறு இரண்டு குற்றச்சாட்டுகளும் கவனத்தில் கொள்ளப்பட்டன.


முழு விவரம் 27.1.2012 தமிழ் முரசில்