மறைந்த அமைச்சர் பற்றி சாமுவேல் துரைசிங்கம் எழுதிய புதிய நூல்

டாக்டர் கோ கெங் சுவீயைப் பற்றி திரு சாமுவேல் துரைசிங்கம் (வலக்கோடியில்) எழுதிய நூலைப் புரட்டிப் பார்க்கிறார் முன்னாள் அதிபர் திரு எஸ். ஆர். நாதன். அவருக்கு வலப்புறம் நிற்பவர் தென்கிழக்காசிய ஆய்வுக் கழகத்தின் தலைவர் திரு கேசவபாணி. படம்: எஸ்பிஎச்
சிங்கப்பூரின் பழம்பெரும் வரலாற்று ஆசிரியரான திரு சேமுவல் துரைசிங்கம், சிங்கப்பூரை நிர்மாணித்த முதல் தலைமுறை தலைவர்களில் ஒருவரான டாக்டர் கோ கெங் சுவீயைப் பற்றிய நூலை எழுதி வெளியிட்டிருக்கிறார்.
Working for Dr Goh Keng Swee என்ற அந்தப் புத்தகத்தில் டாக்டர் கோவுக்குக் கீழ் தாம் பணியாற்றிய போது ஏற்பட்ட அனுபவங்களை அவர் சுவைபட விவரித்திருக்கிறார்.
உதாரணத்திற்கு, டாக்டர் கோ தற்காப்பு அமைச்சராக இருந்த போது, அறிவிப்பு இல்லாமலேயே வெவ்வேறு ஆயுதப்படை முகாம் களுக்கு அவர் திடீர் வருகை மேற்கொள்வார்.
அவ்வாறு ஒருமுறை அவர் வந்த போது அந்த முகாமின் தலைமை அதிகாரியை முகாமில் காணவில்லை. அந்த அதிகாரி தற்காப்பு அமைச்சின் தலைமை யகத்துக்குச் சென்றிருப்பதாக டாக்டர் கோவிடம் தெரிவிக்கப் பட்டது. ஆனால் அது உண்மை இல்லை.
மறுநாள் அந்த அதிகாரி டாக்டர் கோவை அவரது அலுவலகத்தில் சந்திக்குமாறு பணிக்கப்பட்டார். உள்ளே மேஜர் என்ற பதவியுடன் சென்றவர், பதவிக் குறைப்பு செய்யப்பட்டு கேப்டனாக வெளியே வந்தார்.
முழு விவரம் 27.1.2012 தமிழ் முரசில்


