ஆகாயத் தாக்குதல் காப்பறையைச் சுற்றிப்பார்க்க அரிய வாய்ப்பு

Friday, January 27th, 2012
tm logo
தென்கிழக்காசியாவில் இரண்டாம் உலகப் போர் தொடங்கி 70 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு, தேசிய மரபுடைமை கழகம் கண்காட்சிகளுக்கும் உலாக்களுக்கும் அடுத்த மாதம் ஏற்பாடு செய்கிறது.
சிங்கப்பூர் 1942ஆம் ஆண்டு பிப்ரவரி 15ஆம் தேதி ஜப்பானியரின் கையில் சிக்கியது. இரண்டாம் உலகப் போர் நினைவுப்பாதை நடை, நினைவலை நடை, கிராஞ்சி போர்க்கால நினைவு மண்டபத்தில் சடங்கு ஆகியவை கழகம் ஏற்பாடு செய்யும் நிகழ்ச்சிகளில் உள்ளடங்கும்.

ஒரு மாதகால நினைவு நிகழ்ச்சிகளின் முக்கிய அங்கமாக, 1940களில் ஆகாயத் தாக்குதல் காப்பறையாகப் பயன்படுத்தப்பட்ட இடத்தைப் பொதுமக்கள் பார்வையிட அரிய வாய்ப்பு வழங்கப்படும்.

தியோங் பாரு ஆகாயத் தாக்குதல் காப்பறையே சிங்கப்பூரின் ஆகக்கடைசி குடிமை விமானத் தாக்குதல் காப்பறையாகக் கருதப்படுகிறது.

குவான் ச்சுவான் ஸ்திரீட், கட்டடம் 78ல் அமைந்திருக்கும் இந்தக் காப்பறை சுமார் 1,500 சதுர மீட்டர் பரப்பளவு கொண்டது. இது 13 ஐந்தறை வீடுகளின் பரப்பளவுக்கு நிகரானது.

முழு விவரம் 27.1.2012 தமிழ் முரசில்