எங்கள் ஊழியர் விசாரிக்கப்படுவது எங்களுக்கு தெரியாது: எஸ்டி இலக்ட்ரானிக்ஸ்

Friday, January 27th, 2012
tm logo
சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை யின் முன்னாள் ஆணையாளர் திரு பீட்டர் லிம், மத்திய போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவின் இயக்கு
நர் திரு இங் பூன் கே ஆகியோர்  லஞ்ச ஊழல் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகளால் விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த விவகாரத்தில் எஸ்டி இலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் தகவல் தொழில்நுட்பப் பிரிவின் பெண் அதிகாரி ஒருவரும் சம்பந்தப் பட்டுள்ளார் என்று அண்மையில் செய்திகள் வெளியாகியுள்ளன.
இதன் தொடர்பில் தனது கருத்தைத் தெரிவித்துள்ள எஸ்டி இலக்ட்ரானிக்ஸ் நிறுவனம், தமது அதிகாரி ஒருவர் லஞ்ச ஊழல் ஒழிப்புப் பிரிவில் விசாரணைக்கு உதவி வருவது குறித்து தங்களுக்கு எதுவும் தெரியாது என்று அந்நிறு வனத்தின் பேச்சாளர் நேற்று கூறினார்.

முழு விவரம் 27.1.2012 தமிழ் முரசில்