இந்தியப் பிரதமர் மன்மோகனுக்கு நெருக்கடி
ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் முறைகேடு பற்றி நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை நடத்த வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் நேற்றும் கடும் அமளியில் ஈடுபட்டன. அதனால் நாடாளு மன்றத்தின் இரு அவைகளும் திங்கட்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டன.
நேற்று நாடாளுமன்றம் தொடங்கியதும் எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக இரு அவைகளும் முதலில் நண்பகல் வரை ஒத்திவைக்கப்பட்டன. பின்னர் கூடியபோது அதே நிலைமை நீடித்ததால் இரு அவைகளும் அடுத்த வாரம் வரை ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து ஆறு நாட்களாக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் அமளிதான். ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தை விசாரிக்க கூட்டு விசாரணைக் குழு அமைக்கப்பட வேண்டும் என்று கோரி அவர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த வியாழக்கிழமை இந்திய உச்சநீதிமன்றம் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு, சனிக் கிழமைக்குள் இந்த முறைகேடு தொடர்பாக கடந்த 16 மாதங்களாக எவ்வித நடவடிக்கையும் எடுக்காதததற்கான காரணத்தை விளக்கும் விளக்க அறிக்கை ஒன்றைத் தாக்கல் செய்யும்படி நெருக்கடி தந்துள்ளது.
இந்தியாவிலேயே எவ்வித ஊழல் விவகாரத்திலும் தொடர்பற்ற சுத்தமான மனிதர் என்ற பெயரெடுத்தவர் இந்தியப் பிரதமர் மன்மோகன்.
இப்போது அவரது பெயருக்குக் களங்கம் ஏற்படும் வகையில் இந்த விவகாரம் அவரையும் சிக்கலில் கொண்டுபோய் தள்ளி விட்டுள்ளது.
2ஜி ஸ்பெக்ட்ரம் தொடர்பான சுப்பிரமணியம் சுவாமி தொடர்ந்த வழக்கில் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு நெருக்கடி முற்றி வருவதைத் தொடர்ந்து அவர் சார்பில் நீதிமன்றத்தில் முன்னிலை யாகும் சட்ட நிபுணர் குழுவை மாற்றியமைத்துள்ளார். சொலி சிட்டர் ëஜனரல் கோபால் சுப்பிர மணியத்திற்குப் பதில் அட்டர்னி ëஜனரல் ஜி.இ.வாகனா வதி உச்சநீதிமன்றத்தில் முன்னிலை யாகவுள்ளார்.
ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சுவாமி தொடர்ந்த வழக்கின் கடந்த இரண்டு விசாரணைகளின்போதும் பிரதமரின் செயலற்ற போக்கை உச்சநீதிமன்றம் கடுமையாக கண்டித்தது. இதுதொடர்பாக வியாழக்கிழமை நடந்த விசாரணையின்போது சிஏஜி அறிக்கை மிகவும் தீவிரமானது. அதை முதலில் ராசாவின் வழக்கறிஞர், சிபிஐ வழக்கறிஞர் மற்றும் சொலிசிட்டர் ëஜனரல் ஆகியோர் தீவிரமாக படிக்குமாறு அறிவுறுத்தியது. மேலும், இந்த விவகாரத்தில் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தது பற்றிய விளக்க அறிக்கையை சனிக்கிழமைக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த நிலையில் பிரதமர் அலுவலகம் சார்பில் கோபால் சுப்பிரமணியத்திற்குப் பதில் இன்று அட்டர்னி ëஜனரல் வாகனாவதி முன்னிலையாவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனது தரப்பு வாதத்தை அழுத்தமாக வைப்பதற்கு அட்டர்னி ëஜனரலே முன்னிலையாக வேண்டும் என பிரதமரே கூறியதன் பேரில் இந்த மாற்றம்.
இதுகுறித்து கோபால் சுப்பிர மணியம் கருத்து தெரிவிக்கையில், இதை மாற்றம் என்று சொல்ல முடியாது. சிறந்த ஒருங் கிணைப்புக்கான ஏற்பாடுகள் என்று சொல்லலாம். மத்திய அரசு சார்பிலும், தொலைத் தொடர்புத் துறை சார்பிலும் நான் தொடர்ந்து முன்னிலையாவேன். பிரதமர் சார்பில் அட்டர்னி ëஜனரல் முன்னிலையாவார் என்றார்.
2008ம் ஆண்டு நிகழ்ந்த ஸ்பெக்ட்ரம் முறைகேடு விவகாரத் தால் அரசுக்கு 40 பில்லியன் அமெரிக்க டாலர் நஷ்டம் ஏற் பட்டுள்ளதாக கணக்கிடப் பட்டுள்ளது.
இந்நிலையில் அதிமுக நாடாளு மன்றத் தலைவர் மைத்ரேயன் கூறுகையில், பிரதமர் தனது நிலையை முதலில் தெளிவுபடுத்த வேண்டும். ஏன் அவர் மௌனமாக இருக்கிறார் என்பது புரியவில்லை. நாடாளுமன்றத்தைக் காலவரை யின்றி ஒத்திவைத்தால் அதற்கு இந்த அரசுதான் பொறுப்பேற்க வேண்டும் என்றார். - இந்தியத் தகவல் சாதனங்கள்


