பாகிஸ்தானில் ராணுவப் புரட்சி அபாயம்

Friday, January 13th, 2012
pakistan

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரசா கிலானி நேற்று அந்நாட்டு பாதுகாப்பு செயலாளர் நயீம் கலீத் லோதியை பதவியிலிருந்து நீக்கினார்.
இதனால் அந்நாட்டு ராணுவத்திற்கும் அரசாங்கத்திற்கும் இடையில் மோதல் வலுத்து வருகிறது.
பாதுகாப்பு செயலாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டதும் பாகிஸ்தான் ராணுவத் தலைவர் பர்வேஸ் கயானி, உயர்மட்ட ராணுவத் தளபதிகளின் அவசரக் கூட்டத்தை கூட்டினார்.
பாகிஸ்தான் அரசாங்கமும் அவசரமாக நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்டி தற்போதைய நெருக்கடி குறித்து ஆலோசனை நடத்தியது.
அவசரமாகக் கூடிய உயர்மட்ட ராணுவத் தளபதிகள் கூட்டத்தில் என்ன முடிவு எடுக்கப்பட்டது என்ற விவரம் வெளியிடப்படவில்லை.