கார்கள் மோதல்: கவனிப்பின்றி விடப்பட்ட கர்ப்பிணிப் பெண்

Thursday, January 12th, 2012
bukitpanjangcaraccident

புக்கிட் பாஞ்சாங் பகுதியில் நிகழ்ந்த கார் விபத்துக்குப் பின்னர், காரில் வந்த கர்ப்பிணிப் பெண்ணைப் பற்றி கவலைப்படாமல், கார்களுக்கு ஏற்பட்ட சேதத்தைப் பற்றி கார்களின் ஓட்டுநர்கள் ஆராய்ந்தனர். கர்ப்பிணிப் பெண்ணின் பாதுகாப்புக்கு அவர்கள் முதலிடம் அளித்திருக்க வேண்டும் என்று ‘ஸ்டோம்ப்’ இணைய பக்கத்தில் தெரிவித்துள்ளார் ஓர் இணையவாசி. அதே பகுதியில், வேறொரு நாள் இதே போல ஒரு விபத்தைத் தாம் கண்டதாகவும், அப்போது ஒரு கர்ப்பிணிப் பெண் வலியால் முனகிக்கொண்டு இருந்ததாகவும் அவர் கூறினார். இத்தகைய சமயங்களில் வயதானவர்கள், கர்ப்பிணிப் பெண்கள், சிறியவர்களுக்கு முதலில் உதவ வேண்டும் எனத் தெரிவித்த அந்த இணையவாசி, தனி மனிதர் ஒருவரின் பாதுகாப்பே எல்லாவற்றையும் விட முக்கியம் என வலியுறுத்தினார். படம்: ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸ்