நாங்கள் வெற்றி பெற்றால் நானே பிரதமர்: அன்வர்
Sunday, January 8th, 2012
கோலாலம்பூர்: மலேசியாவில் எதிர்க்கட்சித் தலைவர் அன்வர் இப்ராகிம் மீதான ஓரினப்புணர்ச்சி வழக்கின் தீர்ப்பு நாளை அறிவிக்கப்பட உள்ளது.
இந்நிலையில் நீதிமன்றத் தீர்ப்பு தமக்கு எதிராக இருந்து தான் சிறைக்கு செல்ல நேர்ந்தாலும் எதிர் வரும் பொதுத் தேர்தலில் தங்கள் கூட்டணி வெற்றி பெறுமேயானால் சிறை யிலிருந்து தான் வெளிவந்ததும் பிரதமர் பொறுப்பை ஏற்கவிருப்பதாக அன்வர் தெளிபடக் கூறியுள்ளார்.
அந்த இடைப்பட்ட காலத்தில் பிரதமர் பொறுப்பை ஏற்க இடைக்கால பிரதமர் ஒருவரை நியமிக்க இருப்பதாகவும் அவர் கூறினார்.
நீதிமன்றத் தீர்ப்பு எதுவாக இருந்தாலும் எதிர்க்கட்சி கூட்டணி ஆட்சியைக் கைப்பற்ற போதுமான இடங்களைப் பெறும் என்றும் அவர் சொன்னார்.



