நியூசிலாந்தில் பலூன் வெடித்து 11 பேர் பலி

Sunday, January 8th, 2012
hotairbaloonnzafp

வெலிங்டன்: நியூசிலாந்தில் வெப்ப காற்று பலூன் ஒன்று நடுவானில் வெடித்து கீழே விழுந்ததில் விமானி உள்பட அதில் பயணம் செய்த 11 பேரும் உயிரிழந்ததாக போலிசார் கூறினர்.

அந்த பலூன், மின் கம்பத்தில் மோதி வெடித்ததும் அதிலிருந்து 10 மீட்டர் உயரத்திற்கு தீ ஜூவாலைகள் எழுந்ததாகவும் அதனைத் தொடர்ந்து அந்த பலூன், ராக்கெட் வேகத்தில் கீழே விழுந்ததாகவும் அந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறினர்.
நியூசிலாந்து தலைநகர் வெலிங்டனிலிருந்து 80 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கார்டர்டான் பகுதியில் நேற்று காலை இந்த விபத்து நிகழ்ந்ததாக போலிஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
விபத்தைத் தொடர்ந்து அந்த இடத்தை போலிசார் சுற்றி வளைத்தனர்.
விபத்தில் உயிரிழந்த அந்த 11 பேரும் வெலிங்டன் நகரைச் சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்துள்ளது. அவர்களின் குடும்பத்தினர்களுக்கு அதுபற்றி தெரியப்படுத்திய பின்னரே விபத்தில் பலியானவர்களின் பெயர்களை போலிசார் வெளியிட இருப்பதாக போலிஸ் வட்டாரங்கள் கூறுகின்றன. ராட்சத பலூனில் பறப்பதற்கு ஏற்ற தெளிவான வானிலை இருந்தபோதும் பலூனில் ஏற்பட்ட கோளாறே விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.