வாகன உரிமை சான்றிதழ் கட்டணம் 10 ஆண்டு காணாத உயர்வு

Friday, November 19th, 2010

எல்லா கார்களுக்குமான வாகன உரிமை சான்றிதழ் கட்டணம் 10 ஆண்டு காணாத உயர்வை எட்டியுள்ளது.
கட்டண விவரங்கள் நேற்று அறிவிக்கப்பட்டன.
1600 சிசி கார்களுக்கான கட்டணம் 14.7 விழுக்காடு அதிகரித்து $39,000 ஆனது.
பெரிய கார்களுக்கான கட்டணம் 5.3 விழுக்காடு அதிகரித்து $47,890 ஆனது.
பொதுப் பிரிவுக்கான வாகன உரிமை சான்றிதழ் கட்டணம் 8.5 விழுக்காடு உயர்வு உண்டு $49,890 ஆனது. வர்த்தக வாகனங்களுக்கான கட்டணத்தில் 0.6 விழுக்காடு ஏற்றம் கண்டு $31,202க்கு உயர்ந்து.
மோட்டார் சைக்கிள்களுக்கான கட்டணம் 3.4 உயர்ந்து $1,502.30 ஆனது.