சமர்ப்பணம்

Thursday, December 22nd, 2011
samarppanam

சிங்கப்பூர் பலதுறை தொழிற் கல்லூரி படைத்த சம்ர்ப்பணம்

- ஹேமா பாலகிருஷ்ணன் -

இளையர்களின் திறமைக்கு சவாலாக அமைந்தது கடந்த சனிக்கிழமை சிங்கப்பூர் பலதுறை தொழிற் கல்லூரி படைத்த சம்ர்ப்பணம் நிகழ்ச்சி.

கல்லூரியின் இந்திய கலாச்சார மன்றம் படைத்த இந்தப் பெரிய கலாசார நிகழ்ச்சி, நகைச்சுவையை மையமாகக் கொண்டு தயாரிக்கப் பட்டிருந்தது.

நாடகம், நடனம், இசை என முக்கலைகளையும் இணைத்து கண்ணுக்கும் செவிக்கும் விருந்து படைத்தனர் இளையர்கள்.

சிங்கப்பூர் பலதுறைத் தொழிற் கல்லூரியில் ஆண்டுக் கலை நிகழ்வான சமர்ப்பணம் இந்த ஆண்டு, 25வது ஆண்டு நிறைவைக் கொண்டாடியது.

அதையொட்டி “மூன்று சுவடுகள்” என்ற நாடகத்தைப் பெரிய அளவில் அரங்கேற்றினர் மாணவர்கள்.

-- சமர்ப்பணம் படங்கள்