அமெரிக்க ஆதரவுக்கு ஜப்பான் நன்றி கூறியது
யோக்கோஹாமா சீனாவுடனும் ரஷ்யாவுடனும் ஜப்பானுக்கு இருக்கும் வட்டார எல்லைப் பூசலில் அமெரிக்கா அளிக்கும் ஆதரவுக்காக ஜப்பானியப் பிரதமர் நாவ்டோ கான் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவிடம் சனிக்கிழமை நன்றி கூறினார்.
அதோடு, அமெரிக்கா தளம் வகிப்பது ஆசியாவுக்கு அத்தியாவ சியம் என்றும் அவர் கூறினார்.
“சீனா, ரஷ்யா ஆகியவை தொடர்பான விவகாரங்களில் அமெரிக்கா தொடர்ந்து அளித்து வரும் ஆதரவுக்கு அவரிடம் நன்றி கூறினேன்” என்று திரு கான் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
ஆசிய பசிபிக் பொருளியல் ஒத்துழைப்பு (ஏபெக்) மாநாட்டின் போது திரு ஒபாமாவைச் சந்தித்த பிறகு திரு கான் செய்தியாளர் களிடம் பேசினார்.
அமெரிக்காவுக்கும் ஜப்பானுக் கும் இடையில் நிலவும் உறவு “நமது பாதுகாப்புக்கும் செழிப்புக்கும் ஆதார அடிப்படை யாகும்” என்றார் திரு ஒபாமா.
செப்டம்பர் மாதம் தென்சீனக் கடலில் உள்ள சர்ச்சைக்குரிய தீவுகளுக்கு அருகில், சீனக் கப்பல் ஒன்று ஜப்பானியக் கடல்காவல் படகுமீது மோதியது.
சீனக் கப்பலின் கேப்டன் கைது செய்யப்பட்டான்.
இதனால் சீனாவுக்கும் ஜப்பானுக்கும் இடையில் பூசல் ஏற்பட்டது.
அதோடு, இம்மாதத் தொடக்கத்திலிருந்து ரஷ்யாவுக் கும் ஜப்பானுக்கும் இடையிலும் பூசல் நிலவி வருகிறது.
மற்றொரு வட்டார எல்லைப்பூசலின் மையமான நான்கு பசிபிக் தீவுகளில் ஒன்றுக்கு ரஷ்ய அதிபர் டிமிட்ரி மெட்வெடேவ் மேற்கொண்ட வருகை இதற்குக் காரணம்.
- ஏஎப்பி


