எல்லை தாண்டிய இந்திய குரங்கு பாகிஸ்தான் கூண்டில்
Wednesday, December 7th, 2011
பாகிஸ்தான் எல்லைக்குள் தாவிக் குதித்த இந்தியக் குரங்கை பாகிஸ்தான் சிறை பிடித்து அங்குள்ள மிருகக்காட்சி சாலையில் வைத்துள்ளது. பாகிஸ்தானை உளவு பார்ப்பதற்காக இந்தியாவால் அனுப்பப்பட்ட குரங்காக இருக்கலாம் என்று அக்குரங்கை சிறை பிடித்ததாகக் கூறப்படுகிறது.
அந்த குரங்கை பகவல்பூரில் உள்ள மிருகக்காட்சி சாலையில் வைத்துள்ளனர். அதற்கு பாபி என்று பெயர் வைக்கப் பட்டுள்ளது. அதை முகமது இக்பால் என்பவர் கவனித்து வருகிறார்.



