காபூல் குண்டு வெடிப்பில் 54 பேர் பலி, பலர் காயம்
Wednesday, December 7th, 2011
காபூல்: ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் நேற்று குண்டு வெடித்ததில் குறைந்தது 54 பேர் உயிரிழந்தனர் என்றும் பலர் காயம் அடைந்ததாகவும் போலிசார் தெரிவித்துள்ளனர்.
அஷுராவை முன்னிட்டு ஷியா முஸ்லிம்கள் ஏராளமானோர் காபூலில் உள்ள ஒரு வழிபாட்டுத் தலத்தில் கூடியிருந்தபோது அங்கு குண்டு வெடித்ததாக தகவல்கள் கூறின.



