ஜகார்த்தா விமான சேவை மீண்டும் துவக்கம்

Monday, November 8th, 2010

தொடர்ந்து சீற்றம் கொண்டு புகையையும் சாம்பலையும் கக்கி வரும் மெராபி எரிமலை காரணமாக சிங்கப்பூரிலிருந்து இந்தோனீசியா தலைநகர் ஜகார்த்தாவுக்குச் செல்லும் விமானச் சேவைகள் சனிக் கிழமை நிறுத்தப்பட்டிருந்தன.
நிலைமை ஓரளவு சீரடைந்ததைத் தொடர்ந்து நேற்று காலையில் ஏர் ஆசியா விமானங்கள் தங்களது சேவையைத் துவக்கின.
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானங்கள் மாற்றி அமைக்கப்பட்ட நேரத்தில் ஜகார்த்தா கிளம்பிச் சென்றன.
இருப்பினும் நேற்று காலை 10 மணி நிலவரப்படி இதர விமான நிறுவனங்கள் ஜகார்த்தாவுக்கான தங்களது சேவையை நிறுத்தி வைத்திருந்தன.
இதற்கிடையே மெராபி எரிமலை சீற்றத்துக்குப் பலியானோர் எண்ணிக்கை 138க்கு உயர்ந்துள்ளது.
தீக் குழம்புகள் பட்டு உடல் எரிந்த நிலையில் அனுமதிக்கப் படுவோருக்கு உரிய சிகிச்சை செய்ய முடியாமல் மெராபி மலைக்குன்றுக்கு அருகே உள்ள சிறி மருத்துவமனை திண்டாடி வருகின்றது.
மருத்துவர் பற்றாக்குறையும் நிலவுவதால் மருத்துவம் மற்றும் தாதியருக்குப் படிக்கும் மாணவர்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.