பெரிய கார்களின் வாகனச் சான்றிதழ் கட்டணம் புதிய உச்சத்தை எட்டியது
புதன்கிழமை நடந்த ஏலக் குத்தகையில், ஐந்து வாகனச் சான்றிதழ் பிரிவுகளில் நான்கின் விலை ஏற்ற மடைந்தது.
இம்முறை 1,600சிசி வரையிலான கார்களின் வாகனச் சான்றிதழ் விலை $34,001 ஆனது.
இரு வாரங்களுக்குமுன் இப்பிரிவின் வாகனச் சான்றிதழ் விலை $32,415 ஆக இருந்தது குறிப்பிடத் தக்கது.
பெரிய கார்களான 1,600சிசிக்கும் மேற்பட்ட கார்களின் வாகனச் சான்றிதழ் கட்டணம் ஏழு மாதங்களில் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.
இதன் வாகனச் சான்றிதழ் கட்டணம் தற்போதைய ஏலக் குத்தகையில் $45,501ஐ எட்டியது.
இரு வாரங்களுக்கு முந்திய விலை $44,600.
பொதுப் பிரிவின் வாகனச் சான்றிதழ் கட்டணமும் ஏழு மாதங்களில் காணாத வகையில் புதிய உச்சமாக $46,001 ஆனது.
இரு வாரங்களுக்குமுன் இப் பிரிவின் வாகனச் சான்றிதழ் விலை $44,900.
பொதுப் பிரிவு வாகனச் சான் றிதழ்களை எந்தவகை வாகனத் திற்கு வேண்டுமானாலும் பயன் படுத்தலாம். ஆனால், பெரும்பாலும் இப்பிரிவின் வாகனச் சான்றி தழ்கள் கார்களுக்கே பயன்படுத்தப் படுகின்றன.
வர்த்தக வாகனங்களின் சான்றிதழ் கட்டணம் $30,511ல் இருந்து $31,006 ஆக உயர்வு கண்டுள்ளது.
மோட்டார் சைக்கிள்களின் வாகனச் சான்றிதழ் கட்டணம் மட்டுமே இந்தப் போக்கு மாற்றாக $1,689ல் இருந்து $1,452க்குக் குறைந்தது.
ஆண்டிறுதியில் விற்பனை இலக்குகளை நிறைவேற்றும் முனைப்பால் வாகனச் சான்றிதழ் கட்டணங்கள் ஏற்றமடைந்ததாக மோட்டார் வாகன வியாபாரிகள் கூறினர்.
அண்மைய வாரங்களில் புதிய வகை கார்கள் அறிமுகமானதாலும் விற்பனை பெருகியுள்ளது
--


