குழுத் தொகுதிகள் பற்றி கோ விளக்கம்
சிங்கப்பூரில் ஒரு உறுப்பினர் தொகுதிகளைக் காட்டிலும் குழுத் தொகுதிகள் முக்கியத்துவம் பெறுவது பற்றி கோ விளக்குகை யில், தனித் தொகுதியாக இருந்தால் அத்தொகுதி முழுக்க உள்ள மக்களுக்குச் சேவையாற்ற ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் தான் இருப்பார்.
அதுவே தனித் தொகுதியாகும் போது ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களின் தேவைகளைக் கவனிப்பர் என்றார்.
ஒவ்வொரு உறுப்பினரும் தாங்கள் சார்ந்த தனிப் பெரும் பகுதிகளில் கடமையாற்றுவார்கள். அதே நேரம் ஐவரும் ஒரு குழுவாக அடிக்கடி சென்று மக்களைச் சந்திப்பார்கள்.
குழுத் தொகுதியைப் பிரதிநிதிக் கும் அமைச்சர் அத்தொகுதியின் எல்லாப் பகுதிகளிலும் சேவையாற்றுவார்.
தான் சார்ந்திருக்கும் மரீன்பரேட் தொகுதி தனித் தொகுதியாக இருப்பின், தான் மரீன்பரேட் மக்களுக்கு மட்டுமே பணியாற்ற முடியும்.
ஆனால் இது குழுத் தொகுதி யாக இருப்பதால் மரீன்பரேட், பிராடல் ஹைட்ஸ் மற்றும் மவுண்ட்பேட்டன் ஆகிய தொகுதிகளில் கவனம் செலுத்த வேண்டியுள்ளது என்றார் மூத்த அமைச்சர் கோ சோக் டோங்.


