15% வரை பொருளியல் வளர்ச்சி
சிங்கப்பூர்ப் பொருளியல் இந்த ஆண்டில் 13 முதல் 15% வரைப் பட்ட வளர்ச்சியை சாதிக்கும் என்று சிங்கப்பூர் நாணய ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டின் பொருளியல் வளர்ச்சி இந்த அளவுக்குத்தான் இருக்கும் என்று ஏற்கனவே அர சாங்கம் கணித்துள்ளது.
நாணய ஆணையம் நேற்று தனது ஆகப்புதிய பொருளியல் பரிசீலனை அறிக்கையை வெளி யிட்டது. சிங்கப்பூரில் எல்லாத் தொழில்துறைகளிலும் பொருளி யல் தொடர்ந்து முனைப்பாகவே இருந்துவரும் என்று எதிர்பார்க்கப் படுவதாகத் தெரிவித்த ஆணையம், என்றாலும் பொருளியல் வருங் காலத்தில் மெதுவடையக்கூடும் என்று கணித்துள்ளது.
சிங்கப்பூர்ப் பொருளியல் இந்த ஆண்டின் முதல் பாதியில் எதிர் பாரா வகையில் பெரும் வளர்ச்சி கண்டது.
என்றாலும் ஆண்டின் நடுவில் உலகம் முழுவதுமே பொருளியல் வேகம் குறைந்ததால் சிங்கப்பூர்ப் பொருளியலும் மெதுவடைவதற்கான அறிகுறிகள் தெரியவந்தன.
இந்த வட்டார வளர்ச்சி மெது வடையும் வாய்ப்பு இருக்கிறது என்றாலும் வட்டாரத் தேவை காரணமாக பொருளியலுக்கு ஆதரவு கிடைக்கும் என்று தனது அறிக்கையில் ஆணையம் குறிப் பிட்டு உள்ளது.
சிங்கப்பூர் உள்நாட்டுப் பொரு ளியல், அடுத்த ஆண்டுக்கான அதன் வாய்ப்பாற்றலுடன், கட்டிக் காக்கக்கூடிய அளவில் வளரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
என்றாலும் துறைவாரியான வளர்ச்சி வேறுபட்டு இருக்கும் வாய்ப்பு உள்ளது.
தயாரிப்புத் துறையும் சேவைத் துறையும் இந்த ஆண்டில் ஒரே மாதிரியாக நியாயமான அளவுக்கு இருந்தன. என்றாலும் அடுத்த ஆண்டில் சேவைத் துறை இன்னும் பெரிய பங்காற்றும் என்று தெரி வதாக ஆணையம் குறிப்பிட்டு உள்ளது. சேவைத் துறையில் அதிக வேலை வாய்ப்புகள் இருக் கும். நிதி, வர்த்தகம், சுற்றுலாத் துறைகள் வலுவான வளர்ச்சி அடையும் என்று தெரிகிறது.
பணவீக்கம் அடுத்த ஆண்டு முதல்பாதி வரை அதிகமாகவே இருக்கும் என்றும் பிறகு மெது வடையும் என்றும் சிங்கப்பூர் நாணய ஆணையம் தெரிவித்து உள்ளது.


