இரு கொரியாக்களும் பிரிந்த குடும்பங்களை இணைக்க பேச்சு வார்த்தை
Wednesday, October 27th, 2010
வடக்கின் கேசாங் நகரில் கொரிய நாடுகளுக்கான செஞ் சிலுவை சங்கம், பேச்சுவார்த்தை நடந்து வருவதாக “தென்கொரிய ஒன்று சேர்க்கும் அமைச்சக”த் தின் செய்தி தொடர்பாளர், செய்தி யாளர்களிடம் தெரிவித்தார்.
‘எங்களால் முடிந்த வரை பிரிந்த குடும்பங்களை இணைக்க அனைத்துவிதமான முயற்சிகளையும் மேற்கொள் வோம்’ என்று தென்கொரியக் குழுவின் தலைவர் கிம் யாங் ஹ்யுன், இருபது பேர் கொண்ட வடகொரிய குழுவிடம் கூறினார்.
வடகொரியாவில் வெள்ளத் தால் உணவு தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கூறிய அவர் அனைத்துலக நாடுகளின் உதவி வடகொரியாவுக்கு தேவை என்றும் கூறியுள்ளார்.
தென்கொரியாவின் வட கொரியாவுக்கான பயணத்தை திரும்ப மேற்கொள்ளும் பேச்சு வார்த்தைக்கு இன்னமும் திரு கிம் மறுப்பு தெரிவித்து வருவதாக கூறினார்.
ஆனால் தற்பொழுது தொடங்கியுள்ள பேச்சுவார்த்தை மக்களின் நலனுக்காக பிரிந்த குடும்பங்களை இணைப்பதற் காகவே நடத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
ஏஎப்பி


