2011 சிங்கே ஊர்வலம் வரலாற்றில் முத்திரை பதிக்கும்

Wednesday, October 27th, 2010

அடுத்த ஆண்டின் சிங்கே அணி வகுப்பு மிகப் பெரிய அளவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
“கடந்த 39 வருட சிங்கே வரலாற்றில் இல்லாத அளவுக்கு மிகச் சிறந்த அளவில், பிரமாண்டமாக சிங்கே ஊர்வலம் இடம்பெறும்,” என்று நேற்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார் சிங்கே 2011 ஊர்வலத்தின் தலைவர் திரு நா ஜுவே ஹெங்.
இந்த பெரும் ஊர்வலத்தில் இந்திய, மலாய் ஊர்வலங்கள் பெரிய அளவில் இடம்பெறு கின்றன. மொத்தம் 94 இந்திய நற்பணி மன்றங்கள் மற்றும் இதர தோழமை சங்கங்கள் இணைந்து சிங்கே ஊர்வலத்தில் பலநூறு பங்கேற்பாளர்களைக் கொண்ட அணியை களம் இறக்க விருக்கிறது.
பிப்ரவரி 11, 12 தேதிகள் நடைபெறவுள்ள சிங்கே ஊர்வலத்தில் பிரதமர் லீ சியன் லூங்கும் அதிபர் எஸ்.ஆர். நாதனும் சிறப்பு விருந்தினர் களாக பங்கேற்பர்.
“மொத்தம் 350 முதல் 400 கலைஞர்கள் இந்திய அண ¬வகுப்பில் கலந்து கொள்வார்கள்.
“தஞ்சாவூர், ராஜஸ்தான் நகரங்களின் பொம்மலாட்டம், கிராமிய நடனம், உறுமி மேளம் என பல்வேறு அம்சங்களோடு முதன்முறையாக இந்திய மலர்க் கோபுரங்களின் அணிவகுப்பும் சிறப்பு அங்கம் வகிக்கும்,”  என்றார் மக்கள் கழக நற்பணி பேரவையின் தலைவர் திரு ப. திருநாவுக்கரசு.
இந்திய, மலாய், சீன அங்கங் களுடன் வேறு பல கலாசாரங் களைப் பிரதிபலிக்கும் அங்கங் களும் ஊர்வலத்தில் இடம்பெறும். ஆண்டுதோறும் நடைபெறும் சிங்கே ஊர்வலம் அனைத்துலக சாலை அணி வகுப்புகளில் முன்னோடியாக திகழ்கிறது.