சளிக்காய்ச்சல் நோய்க்குத் தடுப்பு மருந்து

Sunday, October 24th, 2010

 நிமோகாக்கல் என்ற பாக்டீரியா குழந்தைகளிடம் உண்டாக்கும் ஒரு வகை சளிக் காய்ச்சல் நோயைத் தடுக்க அந்த பாக்டீரியாவின் மூலக் கூறில் இருந்தே புதியதொரு தடுப்பு மருந்து தயாரிக்கப்பட்டுள்ளது.
அந்தத் தடுப்பு மருந்து, சம்பளம் குறைவாகப் பெறும் குடும்பங் களைச் சேர்ந்த 120 குழந்தை களுக்கு இலவசமாக வழங்கப் பட்டது.
அந்தப் புதிய தடுப்பு மருந்தை நேற்று அறிமுகப்படுத்திய உயிரியல் மருந்துகள் தயாரிப்பு நிறுவனமான ஃபிஸரும், சிங்கப்பூர் குழந்தைகள் மருத்துவச் சமூகமும் இந்த இலவச தடுப்பூசி முகாமுக்கும் ஏற்பாடு செய்திருந்தன.
உலகளவில் இரண்டு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளைக் கொல் லும் நோய்களில் இந்த வகை சளிக் காய்ச்சல் நோய் மிகப் பரவலா னதாக உள்ளது.
தடுப்பு மருந்து கொடுப்பதும் எதிர்ப்புச் சக்தியை அதிகரிப் பதுமே இந்த நோய்த் தொற்றைத் தவிர்க்கக்கூடிய வழிமுறைகள்.
புதிதாக அறிமுகப்படுத்தப் பட்டுள்ள தடுப்பு மருந்தின் மூலம் இந்த நோயிடம் இருந்து குழந்தை களை இதுவரை இல்லாத அளவுக் குப் பெருமளவில் பாதுகாக்க முடி யும் என்றார், சிங்கப்பூர் குழந்தை மருத்துவச் சமூகத் தலைவர் டேன¬யல் கோ.
நேற்றைய இலவச தடுப்பூசி முகாமில் டௌன் ஸின்ட்ரோம் சங்கம், ஜாமியா சிறுவர் இல்லம், சிங்கப்பூர் சிறுவர் சங்கம், வடகிழக்குச் சமூக மேம்பாட்டு மன் றத்தில் உள்ள குடும்ப மையங்கள் போன்றவற்றில் இருந்து வந்த குழந்தைகளுக்குத் தடுப்பு மருந்து இலவசமாய்த் தரப்பட்டது.