களிமண் வீரர்கள்
Tuesday, June 14th, 2011
ஆசிய நாகரிக அரும்பொருளகத்தில் வந்திறங்கியிருக்கும் இந்த களிமண் வீரர்கள் சீனாவின் முதல் பேரரசரின் களிமண் வீரர்கள் படையில் இடம்பெற்றிருந்தவர்கள். சீனாவின் ஷான்ஸி மாநில கலாசாரப் பிரிவு, கலாசார மேம்பாட்டு மையம் ஆகியவற்றுடன் இணைந்து ‘மண்சிலை வீரர்கள்: முதல் பேரரசரும் பெருமைகளும்’ என்ற கண்காட்சியை ஆசிய நாகரிக அரும்பொருளகம் ஏற்பாடு செய்துள்ளது. களிமண் வீரர்களின் இந்தக் கண்காட்சி ஜூன் மாதம் 24ம் தேதி முதல் அக்டோபர் 16ம் தேதி வரை நடைபெறும்.


