பேச்சுத் தமிழ் பொங்கிய கருத்தரங்கு

Tuesday, April 19th, 2011

கவிதா ராஜு

செந்தமிழ்ப் பாடல்களோடு, பரத நாட்டியம் வாத்திய இசை எனப் பாரம்பரியம் மணத்தது, ‘பார்வை 2011’ கருத்தரங்கில். பல நிகழ்ச்சிகளைப் படைத்துள்ள நன்யாங் தொழிநுட்பப் பல்கலைக் கழகத் தமிழ் இலக்கிய மன்றம் முதல் முறையாகப்  ‘பார்வை 2011’  என்ற தலைப்பில் ஒரு கருத்தரங்கை நடத்தியது.
சிறப்பு விருந்தினர் நற்பணிப் பேரவைத் தலைவர் திரு பி திருநாள்கரசு, பிபிஎம் முன்ன¬லையில் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக் கழக அரங்கத் தில் இக்கருத்தரங்கு நடந்தது.
இக்கருத்தரங்கில் கலந்துகொண்ட சிறப்புப் பேச்சாளர்களும் உள்ளூர்ப் பிரபலங்களும் மொழி, அறிவு, அனுபவம் போன்றவற்றை மாணவர்களுடன் பகிர்ந்துகொண்டனர். “பேச்சாளர்கள்  தங்கள் உரை யைத் தெளிவாகவும் சுருக்கமாகவும் ஆற்றியதால் மாணவர்கள் சோர்வடையாமல் கேட்டு ரசித்தனர்,” என்று மன்றத்தின் வர்த்தக நிர்வாகி குமாரி பிரியா சுப்பிரமணியன் கூறினார்.
“சுமார் 14 தொடக்கக் கல்லூரிகள் மற்றும் உயர் நிலைப் பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 300 மாணவர் கள் இக்கருத்தரங்கில் கலந்துகொண்டனர்.   மாணவர் களை அன்றாட வாழ்க்கையில் தமிழைப் பயன்படுத்த  ஊக்குவிப்பதே எங்கள் நோக்கம்,” என்றார்  மன்றத்தின் தலைவர் திரு திலாசன் ஜேசுதாசன்.