Tamilmurasu த‌மிழ் முர‌சு http://tamilmurasu.com.sg ta பென்னாகரம் பொன்னாகரமாகிறது http://tamilmurasu.com.sg/node/7240
தங்கக் காசு கொடுக்க பாமக திட்டம்; அதிர்ச்சி கொடுக்க திமுக வியூகம்
தமிழ்நாட்டின் மிகவும் பாமரத்தனமான பென்னாகரம் தொகுதி, இடைத்தேர்தலில் சிக்கி திக்குமுக்காடுகிறது.
திமுக, பாமக, அதிமுக, தேமுதிக கட்சிகள் போட்டி போட்டுக்கொண்டு அந்தத் தொகுதியில் தனித்தனி வியூகங்களுடன் களத்தில் குதிக்கின்றன.
அரசியலில் வாழ்வா சாவா பேராட்டத்தில் இருக்கும் பாட்டாளி மக்கள் கட்சி, எப்படியாவது வென்றுவிட வேண்டும் என்று முடிவு செய்துள்ளது.
அதற்காகப் பென்னாகரத்தைப் பொன்னாகரமாக ஆக்குவது பற்றி அந்தக்கட்சி ஆலொப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும்
முக‌ப்பு Fri, 19 Mar 2010 06:20:52 +0000 tamilmurasuweb 7240 at http://tamilmurasu.com.sg பட்டப்படிப்பு கட்டணம் உயர்வு http://tamilmurasu.com.sg/node/7239
தங்கள் கட்டணங்கள் இவ்வாண்டு 4 முதல் 18% உயரவுள்ளதாக சிங்கப்பூரின் மூன்று அரசு தேசியப் பல்கலைக் கழகங்களும் நேற்று அறிவித்தன.
நிரந்தவாசிகளுக்கும் வெளிநாட்டவர்களுக்கும் கட்டண உயர்வு இன்னும் அதிகமாக இருக்கும்.
தேசியப் பல்கலைக் கழகத்தின் கட்டடக் கலை வடிவமைப்பு மற்றும் வர்த்தகத் துறை மாணவரின் கட்டணங்கள் 7% உயரும்.
சட்டம் மற்றும் மருந்தகத் துறையின் கட்டணங்கள் 10% உயரும். மற்ற அனைத்து துறைகளில் சேரும் உள்ளூர் மாணவர்களின் கட்டணங்கள் 4% கூடும்.
நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக் கழகத்தில் வர்த்தகம் அல்லாத துறைப் படிப்புக் கட்டணம் 8% உயர இருக்கிறது.

மேலும்
முக‌ப்பு Fri, 19 Mar 2010 06:20:29 +0000 tamilmurasuweb 7239 at http://tamilmurasu.com.sg கூவம்: சென்னை-சிங்கப்பூர் கையெழுத்து http://tamilmurasu.com.sg/node/7238
கூவம் நதியைச் சீரமைக்க தொழில்நுட்ப ஆலொசனைகள் வழங்குவது தொடர்பாக, சிங்கப்பூர் கோஆப்பரேஷன் என்டர்பிரைஸ் நிறுவனமும் சென்னை நதிகள் சீரமைப்பு ஆணையமும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் சென்னையில் நேற்றுக் கையெழுத்திட்டன.
சிங்கப்பூர் நிறுவனத்தின் தலைமைச் செயல் அலுவலர் அல்போன்சா சியா, சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளையின் உறுப்பினர் செயலர் பணீந்திர ரெட்டி இருவரும் முதல்வர் கருணாநிதி, துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் முன்னிலையில் கையெழுத்திட்டனர்.

மேலும்
முக‌ப்பு Fri, 19 Mar 2010 06:20:07 +0000 tamilmurasuweb 7238 at http://tamilmurasu.com.sg மூத்த அமைச்சர் புதுடெல்லி பயணம் http://tamilmurasu.com.sg/node/7237
மூத்த அமைச்சர் கோ சோக் டோங் புது டெல்லிக்கு மூன்று நாள் அதிகாரத்துவ பயணம் சென்றுள்ளார்.
சிங்கப்பூரிலிருந்து நேற்று புறப்பட்ட மூத்த அமைச்சர், சன¬க்கிழமை வரை புது டெல்லியில் இருப்பார்.
திரு கோ இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ் எம் கிருஷ்ணா, பாஜக நாடாளுமன்றத் தலைவி குமாரி சுஷ்மா சுவராஜ், திட்ட ஆணையத் தலைவர் மான்டெக் சிங் அலுவாலியா மற்றும் பல அரசியல் தலைவர்களையும் இந்தியத் தன¬யார் துறையின் மூத்த அதிகாரிகள், உயர் மட்ட பொருளியல் ஆய்வாளர்களையும் சந்தித்துப் பேசுவார்.
மேலும் புது டெல்லியில் நடக்கவிருக்கும் ஆசியக் கழகத்தின் 20ம் ஆசிய வர்த்த மாநாட்டில் சிறப்புரை ஆற்றுவார்.

மேலும்
முக‌ப்பு Fri, 19 Mar 2010 06:19:19 +0000 tamilmurasuweb 7237 at http://tamilmurasu.com.sg ஆர்ப்பாட்டக்காரர்களுடன் பேசத் தயார்: தாய். பிரதமர் http://tamilmurasu.com.sg/node/7236
தாய்லாந்தில் அரசுக்கு எதிராக பேரணி நடத்தி வரும் சிவப்பு நிற சட்டை ஆர்ப்பாட்டக்காரர்களுடன் பேச்சு நடத்த தயாராக இருப்பதாக தாய்லாந்துப் பிரதமர் அபிசித் விஜஜிவா தெரிவித்துள்ளார்.
“ஆர்ப்பாட்டங்கள் சட்டத்திற்கு உட்பட்டு நடக்கும்போது அரசாங்கம், ஆர்ப்பாட்டக்காரர்களுடன் பேச்சு நடத்த எந்த ஆட்சேபனையும் இல்லை,” என்று திரு அபிசித் கூறினார்.
தாய்லாந்து ராணுவத் தளத்தில் நடந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் திரு அபிசித் பேசினார். பேச்சின் விவரம் பற்றி அவர் எதுவும் கூறவில்லை.

மேலும்
உலகம் Fri, 19 Mar 2010 06:15:39 +0000 tamilmurasuweb 7236 at http://tamilmurasu.com.sg முக்கிய தருணத்தில் ஒபாமா இந்தோனீசியா வருகை http://tamilmurasu.com.sg/node/7235
முக்கியமான கட்டத்தில் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் 3 நாள் இந்தோனீசிய வருகை இடம் பெறுகிறது.
அடுத்த வாரம் திரு ஒபாமா தன் மனைவி, மகள்களுடன் இந்தோனீசியா வருகிறார்.
இந்தோனீசியா எடுத்து வரும் பாதுகாப்பு நடவடிக்கைகளில் அமெரிக்கா கொண்டுள்ள நம்பிக்கையை புலப்படுத்தும் வகையில் திரு ஒபாமாவின் வருகை அமைந்திருக்கும்.
இதனால் திரு ஒபாமாவின் இந்தோனீசிய வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
இந்த வருகையின்போது ஒபாமா, முக்கிய உரையாற்றவுள்ளார்.
இந்தோனீசியாவுடனான அமெரிக்க உறவு மேம்பட்டிருப்பதை புலப்படுத்துவதே ஒபாமாவின் 3 நாள் இந்தோனீசிய வருகையின் நோக்கம் என்று கூறப்படுகிறது.

மேலும்
உலகம் Fri, 19 Mar 2010 06:15:17 +0000 tamilmurasuweb 7235 at http://tamilmurasu.com.sg அமெரிக்கரை விடுதலை செய்தது மியன்மார் http://tamilmurasu.com.sg/node/7234
மியன்மாரில் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டிருந்த அமெரிக்கர் ஒருவரை மியன்மார் ராணுவ அரசு விடுதலை செய்துள்ளது.
அமெரிக்க மனித உரிமை குழுவைச் சேர்ந்த காவ் ஜா லிவின் என்பவர் ஏமாற்று, மோசடி ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரில் கடந்த மூன்று ஆண்டுகளாக மியன்மார் சிறை வைக்கப்பட்டிருந்தார்.
விடுவிக்கப்பட்ட அந்த அமெரிக்கர் நேற்று அங்குள்ள அமெரிக்கத் தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார்.
முன்னதாக அவரை விடுதலை செய்யுமாறு அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுமார் 50 பேர் கையெழுத்திட்ட கடிதம் ஒன்று மியன்மாருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
உலகம் Fri, 19 Mar 2010 06:14:56 +0000 tamilmurasuweb 7234 at http://tamilmurasu.com.sg ஐந்து அமெரிக்கர்கள் மீது பயங்கரவாதக் குற்றச்சாட்டு http://tamilmurasu.com.sg/node/7233
பாகிஸ்தானில் கைது செய்யப்பட்ட அமெரிக்க இளையர்கள் 5 பேர் மீது பயங்கரவாத குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக அவர்களின் வழக்கறிஞர்கள் கூறினர்.
பாகிஸ்தானில் தாக்குதல் நடத்த சதித் திட்டம் தீட்டியவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட அந்த 5 பேரும் அந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளனர்.
அவர்கள் 18 வயதுக்கும் 25 வயதுக்கும் இடைப் பட்டவர்கள். சென்ற ஆண்டு டிசம்பர் மாதம் அவர்கள் கைது செய்யப்பட்டனர். குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
முன்னதாக அந்த 5 பேரையும் அமெரிக்காவுக்கு திருப்பி அனுப்ப பாகிஸ்தான் மறுப்பு தெரிவித்தது.
உலகம் Fri, 19 Mar 2010 06:14:30 +0000 tamilmurasuweb 7233 at http://tamilmurasu.com.sg தைவான் அதிபரின் மகள்களுக்கு கொலை மிரட்டல் http://tamilmurasu.com.sg/node/7232
தைவானிய அதிபர் மா யிங் ஜியோவின் இரு மகள்களுக்கு இணையப் பக்கத்தில் கொலை மிரட்டல் வந்ததைத் தொடர்ந்து அமெரிக்க போலிஸ் பாதுகாப்பை தைவான் நாடியுள்ளது.
திரு மாவின் இரு மகள்களும் தற்போது நியூயார்க்கில் பணி புரிகின்றனர். அவர்களுக்கு அமெரிக்கப் போலிசார் பாதுகாப்பு கொடுக்குமாறு அமெரிக்காவை தைவான் கேட்டுக்கொண்டுள்ளது.
2008-ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்று அதிபராகப் பொறுப்பேற்ற திரு மாவின் செல்வாக்கு படிப்படியாக குறைந்து வருகிறது.
உலகம் Fri, 19 Mar 2010 06:14:13 +0000 tamilmurasuweb 7232 at http://tamilmurasu.com.sg மீட்கப்பட்ட பிரிட்டிஷ் சிறுவன் குடும்பத்துடன் சேர்ந்தான் http://tamilmurasu.com.sg/node/7231
பாகிஸ்தானில் கடத்தல்காரர்களிட மிருந்து மீட்கப்பட்ட பிரிட்டிஷ் சிறுவனான 5 வயது ஷாகில் சயீத், தன் குடும்பத்துடன் ஒன்று சேர்ந்திருக் கிறான்.
கடத்தல்காரர் களிடம் 10,000 பிரிட்டிஷ் பவுன் பிணைப் பணம் கொடுக்கப் பட்டு அச்சிறுவன் மீட்கப்பட்டுள்ளான்.
பாகிஸ்தானில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு அச்சிறுவன் தன் தந்தையுடன் வந்திருந்தபோது கடந்த 3-ந் தேதி மர்ம நபர்களால் கடத்தப்பட்டான்.
இதைத்தொடர்ந்து அனைத்துலக போலிஸ் உதவியுடன் 13 நாட்களுக்குப் பிறகு அச்சிறுவன் மீட்கப்பட்டுள்ளான்.
உலகம் Fri, 19 Mar 2010 06:14:01 +0000 tamilmurasuweb 7231 at http://tamilmurasu.com.sg