தாய்லாந்து தலைநகர் பேங்காக்கில் உள்ள ஒரு நாடாளுமன்றத் தொகுதியின் ஆளும் ஜனநாயகக் கட்சி உறுப்பினர் இறந்ததையடுத்து அங்கு நேற்று இடைத்தேர்தல் நடைபெற்றது.
அந்தத் தொகுதிக்கு சிறையிலிருந்தபடியே முன்னாள் பிரதமர் தக்சினின் சிவப்புச் சட்டை ஆதரவாளர்களில் ஒருவர் போட்டியிடுகிறார்.
இதனால் இந்த இடைத்தேர்தல் முடிவு தாய்லாந்தின் தற்போதைய அரசியல் நிலவரத்தைப் படம் பிடித்துக் காட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இங்கு போட்டியிடும் பேங்காக்கின் முன்னாள் துணை ஆளுநர் ஜனநாயகக் கட்சி சார்பாகப் போட்டியிடுகிறார்.
இவரை எதிர்த்துப் போட்டியிடுபவர் பயங்கரவாதக் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கி சிறையில் உள்ளார்.