டாக்சி ஓட்டுநர் பிரான்சிஸ் கியன் டாய் ஹோ, தனது டிரான்ஸ்-கேப் டாக்சியில் ஏறிய 24 வயது பெண் சிமெய் ஸ்திரீட் 1ல் இறங்கும்போது சட்டென அவரது வலது கையைப் பிடித்து முத்தமிட்டார்.
சென்ற ஆகஸ்ட் மாதம் நடந்த இச்சம்பவம் பற்றி அப்பெண் தனது காதலனிடம் சொன்னார். போலிஸ் அதிகாரியான காதலர், போலிசில் புகார் செய்யுமாறு பெண்ணிடம் கூறினார்.
நான்கு நாட்களுக்குப் பிறகு 52 வயது கியன் கைது செய்யப்பட்டார்.
பெண்ணை மானபங்கப்படுத்திய குற்றத்திற்காக கியனுக்கு இரண்டு வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
சென்ற 2002ம் ஆண்டு 19 வயதுப் பெண் பயணியையும் கியன் இதே போல மானபங்கப்படுத்தியதாக மாவட்ட நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
அந்தப் பெண்ணின் கையில் முத்தமிட்டதோடு, கட்டித்தழுவி கன்னத்திலும் முத்தமிட்டார். அந்தக் குற்றத்திற்காக அவருக்கு $8,000 அபராதம் விதிக்கப்பட்டது.