fontsize: 60% 70% 80% 90%

தங்கப் பந்து விருது பெற்றார் ஃபோர்லான்

Bookmark and Share

தென் ஆப்பிரிக்காவில் நிறைவு பெற்ற உலகக் கிண்ணப் போட்டியின் தலை சிறந்த வீரருக்கு வழங்கப்படும் தங்கப் பந்து விருதை உருகுவேயின் அணித் தலைவர் டியேகோ ஃபோர்லான்,31 (படம்) வென்றுள்ளார்.
உருகுவே அரை இறுதி ஆட்டம் வரை முன்னேற ஃபோர்லான¬ன் பங்கு இன்றியமையாததாக அமைந்தது. இந்தத் தொடரில் இவர் ஐந்து கோல்களை அடித்திருந்தார். 2வது இடம் நெதர்லாந்தின் ஷினைடருக்கும், 3வது இடம் ஸ்பெயினின் டேவிட் வியாவுக்கும் கிடைத்தது.
ஆக அதிக கோல்கள் அடித்தவருக்கான தங்கக் காலணி விருதை ஜெர்மன¬யின் தாமஸ் முல்லர் வென்றார். இவரும் ஸ்பெயின¬ன் டேவிட் வியாவும், ஹாலந்தின் ஷினைடரும் தலா ஐந்து கோல்கள் அடித்திருந்தாலும் மேலும் மூன்று கோல்களுக்குக் காரணகர்த்தாவாக இருந்துள்ளார் முல்லர். அதன் அடிப்படையில் இவருக்கு விருது வழங்கப்பட்டது.
தாமஸ் முல்லர் (20) சிறந்த இளம் வீரர் விருதையும் வென்றார்.

Copyright © 2006 Singapore Press Holdings Ltd. Co. Regn. No. 198402868E. All rights reserved.
82, Genting Lane, Singapore 349567 Tel: 6388 3838