fontsize: 60% 70% 80% 90%

பென்னாகரம் பொன்னாகரமாகிறது

Bookmark and Share

தங்கக் காசு கொடுக்க பாமக திட்டம்; அதிர்ச்சி கொடுக்க திமுக வியூகம்
தமிழ்நாட்டின் மிகவும் பாமரத்தனமான பென்னாகரம் தொகுதி, இடைத்தேர்தலில் சிக்கி திக்குமுக்காடுகிறது.
திமுக, பாமக, அதிமுக, தேமுதிக கட்சிகள் போட்டி போட்டுக்கொண்டு அந்தத் தொகுதியில் தனித்தனி வியூகங்களுடன் களத்தில் குதிக்கின்றன.
அரசியலில் வாழ்வா சாவா பேராட்டத்தில் இருக்கும் பாட்டாளி மக்கள் கட்சி, எப்படியாவது வென்றுவிட வேண்டும் என்று முடிவு செய்துள்ளது.
அதற்காகப் பென்னாகரத்தைப் பொன்னாகரமாக ஆக்குவது பற்றி அந்தக்கட்சி ஆலொப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பென்னாகரத்தில் மார்ச் 27ல் இடைத் தேர்தல் நடக்கிறது. மொத்தம் 170,000 வாக்காளர்கள். அவர்களில் பெண்கள் ஏறக்குறைய சரிசமமாக இருக்கிறார்கள்.
பென்னாகரத்தைச் சேர்ந்த ஒரு லட்சம் பெண்களுக்குத் தலா ஒரு கிராம் இல்லது இரண்டு தங்கக் காசு கொடுத்து வாக்குகளை வேட்டையாடும் உத்தி பாமக மனதில் ஊசலாடுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
வீட்டுக்கு ஒரு செல்பேசி (கைத்தொலைபேசி) கொடுக்கலாம் என்று அந்தக்கட்சி யோசித்தாகவும் ஆனால் அதை காதும் காதும் வைத்ததுபோல் ரகசியமாகச் செய்துமுடிக்க முடியாது என்பதால் அந்தத் திட்டத்தைப் பாமக கைவிட்டதாகவும் தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.
அதேவேளையில் அதிமுக தலைவி செல்வி ëஜயலலிதா, தன்னுடைய தோழி சசிகலாவுடன் கொடநாடு ஔய்வு இல்லத்தில் இருந்து சென்னை திருப்பி இருக்கிறார்.
இவர் பென்னாகரத்தை மனதில் வைத்தே முன்னதாகவே சென்னை திரும்பி இருக்கிறார் என்று கட்சியினர் பரபரப்பாக சொல்கிறார்கள்.
ஆனால் அண்மையில் திறக்கப்பட்ட புதிய சட்ட மன்றத்தில் இன்று புதிய வரவு செலவு திட்டம் தாக்கலாகிறது.
அந்த முதல் கூட்டத்தில் கலந்துகொள்ளும் வியூகத்துடன் ëஜயலலிதா சென்னை திருப்பி இருக்கிறார் என்றும் பேசப்படுகிறது.
இந்த நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த், ஐந்து நாட்கள் பென்னாகரத்தில் தங்கி பிரசாரத்தில் ஈடுபடுகிறார். எப்படியாவது வைப்புத் தொகையையாவது காப்பாற்றிவிடவேண்டும் என்பதே விஜயகாந்தின் நோக்கமாக இருக்கும் என்று கவனிப்பாளர்கள் சொல்கிறார்கள்.
எதிர்த்தரப்புகள் இப்படி பல சிந்தனையில் இருக்கையில் ஆளும் தரப்பு, எதிர்த்தரப்புகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் காய்களை நகர்த்துகிறது.
ஐந்தாவது தடவையாக 2006ல் முதல்வர் பதவி ஏற்றுக் கொண்ட திமுக தலைவர் திரு கருணாநிதி, இதுவரை கடந்த நான்கு ஆண்டுகளில் நடந்துள்ள இடைத் தேர்தல் பிரசாரத்துக்குச் சென்றதே இல்லை.
திமுகவின் தென்மண்டலத் தலைவர் மு.க. அழகிரி இடைத்தேர்தல் பொறுப்பை ஏற்றுக் கொண்டு பல வெற்றி பாணிகளை, அதிசயங்களை நிகழ்த்திக் காட்டினார்.
ஆனால் பென்னாகரத்தைப் பொறுத்தவரையில் திரு அழகிரி ஒதுக்கி இருப்பதாகத் தெரிகிறது.
பதிலாக ஆயிரம் அழகிரிகளுக்குச் சமமான முதல்வர் கருணாநிதி பென்னாகரத்தைக் கையில் எடுக்கிறார்.
இந்த மாதம் 24ம் தேதி முதல்வர் பிரசாரம் செய்ய தொகுதிக்கு வரப்போகிறார் என்ற செய்தி எதிர்க்கட்சிகளுக்கு வயிற்றில் புலியைக் கரைப்பதாக இருக்கிறது.
திரு கருணாநிதி பென்னாகரம் வருகைக்கு முன்னதாக இன்று புதிய சட்டமன்றத்தில் புதிய வரவு செலவு திட்டம் வருகிறது.
அந்த திட்டம் பரபரப்பாகப் பேசப்படும் திட்டமாகவும் பல தரப்புகளுக்கும் இன்னும் ஏராள சலுகைகளைக் கொண்டதாக இருக்கும் என்றும் பேசப்படுகிறது.
அத்திட்டம் ஆளும் திமுகவின் பென்னாகரம் வெற்றியை உறுதிப்படுத்துவதில் மிகவும் முக்கிய அம்சமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
இதற்கிடையே பென்னாகரம் தொகுதியைச் சேர்ந்த சுமார் 30,000 வாக்காளர்கள் பெங்களூரு நகரில் வேலை பார்க்கிறார்கள்.
அவர்கள் வாரம் ஒரு நாள், அல்லது மாதம் ஒரு நாள் பென்னாகரம் திரும்புவது வழமை.
ஆகையால் அவர்களைத் தேடி கட்சியினர் பெங்களூருவுக்கே சென்று இருக்கிறார்கள்.

Copyright © 2006 Singapore Press Holdings Ltd. Co. Regn. No. 198402868E. All rights reserved.
82, Genting Lane, Singapore 349567 Tel: 6388 3838