fontsize: 60% 70% 80% 90%

கூவம்: சென்னை-சிங்கப்பூர் கையெழுத்து

Bookmark and Share

கூவம் நதியைச் சீரமைக்க தொழில்நுட்ப ஆலொசனைகள் வழங்குவது தொடர்பாக, சிங்கப்பூர் கோஆப்பரேஷன் என்டர்பிரைஸ் நிறுவனமும் சென்னை நதிகள் சீரமைப்பு ஆணையமும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் சென்னையில் நேற்றுக் கையெழுத்திட்டன.
சிங்கப்பூர் நிறுவனத்தின் தலைமைச் செயல் அலுவலர் அல்போன்சா சியா, சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளையின் உறுப்பினர் செயலர் பணீந்திர ரெட்டி இருவரும் முதல்வர் கருணாநிதி, துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் முன்னிலையில் கையெழுத்திட்டனர்.
இந்த ஒப்பந்தத்தின் படி, சென்னை நதிகள் சீரமைப்பு குறித்து முழுமைத் திட்டம் தயாரித்தல், திட்ட மேலாண்மை, செயல் அலுவலர்கள், பொறியாளர்கள் திறனை மேம்படுத்துதல், சீரமைப்புப் பணிகள் போன்ற வற்றில் சிங்கப்பூர் நிறுவனம் ஆலொசனைகளை வழங்கும்.
முதல்கட்டமாக கூவம் நதி சீரமைப்பு தொடர்பாக அக்குழுவினர் தமிழக அதிகாரிகளிடம் ஆலொசனை நடத்தினர். கூவம் நதியின் பல்வேறு இடங்களையும் நேரில் பார்வையிட்டனர்.
சென்னையில் மட்டும் சுமார் 18 கிமீ தூரம் ஔடும் கூவம் ஆற்றை சுத்தப்படுத்தி தூய்மையான நீர் நிலையாக்கத் தமிழக அரசு திட்டமிட்டுள்ளது
கூவம் ஆற்றில் ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், தூர்வார்தல் போன்ற பல்வேறு பணிகளுக்காகக் கடந்த 2008ம் ஆண்டில் ரூ1,260 கோடி (420 மில்லியன் வெள்ளி) தமிழக அரசு ஒதுக்கியிருந்தது.
கூவத்தை நவீன முறையில் சீரமைப்பது தொடர்பான விவரங்களைச் சேகரிக்க துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், உயரதிகாரிகள் கடந்த 2009ம் ஆண்டு சிங்கப்பூர் சென்றுவந்து பல்வேறு விவரங்களைச் சேகரித்து முதல்வர் கருணாநிதியிடம் அறிக்கையைத் தாக்கல் செய்தனர்.
இதைத் தொடர்ந்து கூவம் உள்ளிட்ட ஆறுகளை சீரமைக்கச் சென்னை நதிகள் ஆணையம் அமைத்த தமிழக அரசு, சீரமைப்பு பணிகளில் தொழில்நுட்ப ஆலொசனைகள் பெற சிங்கப்பூர் அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்ள முடிவு செய்தது.
சிங்கப்பூர் கூட்டுறவு நிறுவனத்தின் தலைமைச் செயல் அலுவலர் அல்போன்சஸ் சியா தலைமையில் அதிகாரிகள் குழு மூன்று நாட்கள் பயணம் மேற்கொண்டு சென்னை சென்றது.

Copyright © 2006 Singapore Press Holdings Ltd. Co. Regn. No. 198402868E. All rights reserved.
82, Genting Lane, Singapore 349567 Tel: 6388 3838