மூத்த அமைச்சர் கோ சோக் டோங் புது டெல்லிக்கு மூன்று நாள் அதிகாரத்துவ பயணம் சென்றுள்ளார்.
சிங்கப்பூரிலிருந்து நேற்று புறப்பட்ட மூத்த அமைச்சர், சன¬க்கிழமை வரை புது டெல்லியில் இருப்பார்.
திரு கோ இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ் எம் கிருஷ்ணா, பாஜக நாடாளுமன்றத் தலைவி குமாரி சுஷ்மா சுவராஜ், திட்ட ஆணையத் தலைவர் மான்டெக் சிங் அலுவாலியா மற்றும் பல அரசியல் தலைவர்களையும் இந்தியத் தன¬யார் துறையின் மூத்த அதிகாரிகள், உயர் மட்ட பொருளியல் ஆய்வாளர்களையும் சந்தித்துப் பேசுவார்.
மேலும் புது டெல்லியில் நடக்கவிருக்கும் ஆசியக் கழகத்தின் 20ம் ஆசிய வர்த்த மாநாட்டில் சிறப்புரை ஆற்றுவார்.
ஆசியா, ஐரோப்பா, அமெரிக்காவைச் சேர்ந்த உயர் மட்ட அரசியல் மற்றும் மூத்த வர்த்தக நிர்வாகிகளை ஒன்றிணைக்க இந்த மாநாடு முயல்கிறது.
திரு கோவுடன் வெளியுறவு மூத்த துணை அமைச்சர் ஜைனுல் அபிதின் ரஷீத், கல்வி, வர்த்தகத் தொழில் மூத்த துணை அமைச்சர் எஸ் ஈஸ்வரன், மூத்த அரசு அதிகாரிகள் பலரும் உடன் சென்றுள்ளனர்.