fontsize: 60% 70% 80% 90%

முக்கிய தருணத்தில் ஒபாமா இந்தோனீசியா வருகை

முக்கியமான கட்டத்தில் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் 3 நாள் இந்தோனீசிய வருகை இடம் பெறுகிறது.
அடுத்த வாரம் திரு ஒபாமா தன் மனைவி, மகள்களுடன் இந்தோனீசியா வருகிறார்.
இந்தோனீசியா எடுத்து வரும் பாதுகாப்பு நடவடிக்கைகளில் அமெரிக்கா கொண்டுள்ள நம்பிக்கையை புலப்படுத்தும் வகையில் திரு ஒபாமாவின் வருகை அமைந்திருக்கும்.
இதனால் திரு ஒபாமாவின் இந்தோனீசிய வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
இந்த வருகையின்போது ஒபாமா, முக்கிய உரையாற்றவுள்ளார்.
இந்தோனீசியாவுடனான அமெரிக்க உறவு மேம்பட்டிருப்பதை புலப்படுத்துவதே ஒபாமாவின் 3 நாள் இந்தோனீசிய வருகையின் நோக்கம் என்று கூறப்படுகிறது.
பயங்கரவாதச் செயல்களுக்கு எதிராக இந்தோனீசியா எடுத்து வரும் பாதுகாப்பு நடவடிக்கைகளில் அமெரிக்க தற்போது அதிக நம்பிக்கை வைத்துள்ளது.
இந்தோனீசியாவில் மேற்கத்திய இலக்குகளைக் குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி வந்துள்ளனர்.
பயங்கரவாதத் தாக்குதல்களை முறியடிக்க இந்தோனீசியா பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.
இந்தோனீசியாவில் பல்வேறு குண்டு வெடிப்பு தாக்குதல்களுக்குக் காரணமாக இருந்த பயங்கரவாதி நூர்தின் டாப்பை சென்ற மாதம் இந்தோனீசியப் போலிசாரால் சுட்டுக் கொன்றனர்.
இன்னும் பல பயங்கரவாதிகளை இந்தோனீசிய அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

Copyright © 2006 Singapore Press Holdings Ltd. Co. Regn. No. 198402868E. All rights reserved.
82, Genting Lane, Singapore 349567 Tel: 6388 3838